Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொபைல் அப்ளிகேஷன் வாயிலாக ரயில் டிக்கெட்!

நாம் எல்லோரும் டிஜிட்டலாக வளர்ந்து வரும் இந்த தருணத்தில், நமது அரசாங்கமும், அதன் சேவைகளும் டிஜிட்டல் மையமாகி வருகின்றன. இது பெருமைபட வேண்டிய விஷயம்தான். சென்னை போன்ற பெரிய நகரங்களில் உள்ளூர் பயணங்களுக்காக லோக்கல் மின்சார ரயில்கள் இயக்கப்படுவது நம் எல்லோரும் அறிந்ததே. அதற்கான டிக்கெட்களை இனி மொபைல் அப்ப்ளிகேஷன் மூலமும் எடுக்கலாம் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்து , சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே, முதல் கட்டமாக தொடங்கி வைத்திருக்கிறார். ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஸ்மார்ட்போனில், இந்த வசதியை பெற முடியும். கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று, UTS mobile ticketing என்ற, அப்ளிகேஷனை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். அதில் மொபைல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், பாஸ்வேர்டு எண் கொடுக்கப்படுகிறது. அதை வைத்து புறப்படும் இடம் மற்றும் சென்றடையும் இடம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை பதிவு செய்து, டிக்கெட்டை பெற முடியும்.

ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்!
கட்டணம் செலுத்துவதை பொறுத்தவரை, ரயில் நிலைய டிக்கெட் வழங்கும் மையங்களில், மொபைல்போன் எண்ணை சொல்லி, போதிய பணம் செலுத்தி, 'ரீ சார்ஜ்' செய்து கொள்ளலாம். ரயில்வே இ- வாலட் எனப்படும், பணம் செலுத்தும் முறைக்காக, ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். ரயில் நிலையத்திற்குள்ளோ, ரயிலில் இருக்கும்போதோ, இந்த டிக்கெட்டை, மொபைல் போன் மூலம் பெற முடியாது. ரயில்வே வழித்தடத்தில் இருந்து, 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால், 5 கி.மீ., தொலைவிற்குள், டிக்கெட்டை முன் பதிவு செய்ய முடியும். பயண நேரத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட் பெற வேண்டியது அவசியமாகும். எப்போதும் போல ஆப் மூலம் பெறும் டிக்கெட்டையும் ரத்து செய்ய இயலாது.


 

பயனாளர்களின் கருத்து!
இந்த அப்ளிகேஷனை தற்போது 2,674 பேர் மட்டுமே டவுண்லோடு செய்திருக்கிறார்கள். மேலும் இந்த அப்ளிகேஷன் குறித்து அவரவர்களின் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். அதை வைத்து பார்க்கும் போது இன்னும் இதில் அப்டேட் செய்யவேண்டிய விஷயங்கள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. இதை நிச்சயம் ரயில்வே அமைச்சகம் கவனித்தால் சேவை இன்னும் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ