Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்ரி கமாடிட்டி பொருட்களின் விலை அதிகரிப்பால்... நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு!

இந்தியா ஒரு விவசாய நாடு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி இருக்கும்போது இன்றைய மத்திய அரசு விவசாயத்தை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு, விவசாயிகள் மற்றும் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. ஆனால் விவசாயம் பாதிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரமே பாதிப்படையும் என்பதன் முன்னோட்டமாக, மோசமான பருவநிலை மற்றும் குறைவான மழைப் பொழிவு போன்றவற்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களாக பருவம் தாழ்ந்து பெய்யும் மழையினால் நாட்டின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல சென்ற ஆண்டை விட 12% மழை பொழிவின் அளவு குறைவாகவே காணப்படுகிறது. இதனால் மஞ்சள், சோயாபீன், மிளகாய், கடுகுவிதை, மக்காச் சோளம், சோயா ஆயில் போன்ற பல அக்ரி கமாடிட்டி பொருட்கள் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் விற்கப்பட்ட விலையை விட நேற்று (23.4.15) விலை அதிகரித்து வர்த்தகமானது.

இப்படி உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்தால் நாட்டின் உணவுப் பணவீக்க விகிதமானது சீக்கிரமாகவே அதிகரிக்கும். இதனால் விலைவாசி அதிகரித்து மக்கள் அவதிக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் கிராமப் புற வருவாய் பாதிக்கப்பட்டால் டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள், கார், உரங்கள், விவசாய ரசாயனங்கள் போன்ற பல்வேறு பொருட்களின் தேவைகளும் வெகுவாக குறைந்து, அதன் விற்பனையும் பாதிக்கப்படும். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ