Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெச்டிஎஃப்சி பேங்க்: நிகர லாபம் 21% அதிகரிப்பு!

ஹெச்டிஎஃப்சி பேங்க் 2014-15-ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலண்டு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 21% அதிகரித்து 2,807 கோடி ரூபாயாக காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,327 கோடி ரூபாயாக இருந்தது. தனது வளர்ச்சிக்கு காரணமாக, வங்கியின் கடன் வழங்கும் விகிதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் தனியார் வங்கிகளில் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாக உருவெடுத்துள்ள ஹெச்டிஎஃப்சி பேங்க், கடந்த நிதி ஆண்டு முழுவதற்குமான நிகர லாபம் 10,000 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய 2013-14-ம் நிதி ஆண்டை விட 20.5% அதிகம் எனவும் அந்த வங்கி தனது நான்காம் காலாண்டு முடிவில் தெரிவித்திருக்கிறது.

அதே போல வங்கியின் நிகர வட்டி வருமான விகிதமும் 21% அதிகரித்து 6,013 கோடியாக காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,953 கோடி ரூபாயாக இருந்தது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ