Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இ-காமர்ஸ் நிறுவனங்களில் 20,000 புதிய வேலைகள்!

இன்றைய உலகம் என்பதை விட இணையதள உலகம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல் என்பதே இன்றைய தாரக மந்திரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. மிக முக்கியமாக இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களின் பிஸினஸ் வளர்ச்சிகளை டிஜிட்டல்மையமாக்கி மின்னல் வேகத்தில் முன்னேற்ற நினைத்திருக்கின்றன.

அதேசமயம் டிஜிட்டல் வேகத்திற்கு ஈடுகொடுக்க மனிதனின் ஆற்றலும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அவசியமாகிறது என்பதால், ஃப்ளிப்கார்ட், அமேஸான், ஸ்னேப்டீல் போன்ற பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் மொத்தம் 20,000 புதிய வேலைகளை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றன.

இந்த இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இடையேயுள்ள மிகப்பெரிய போட்டி, வாடிக்கையாளர்களுக்கு யார் முதலில் பொருட்களை கொண்டுபோய் சேர்ப்பது என்பதில்தான். அதனால் டெலிவரி வேலை செய்யும் ஆட்களை அதிகரிக்கப் போவதாக ஒவ்வொரு நிறுவனமும் திட்டமிட்டிருக்கின்றன.

தன்னிடம் 7,000 பணியாளர்கள் வேலை செய்து வரும் நிலையில், நடப்பு ஆண்டில் மட்டும் அமேஸான் 6,000 புதிய பணியாளர்களையும் பல்வேறு வேலைக்காக எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அதே போல ஃப்ளிப்கார்ட் 5,000 புதிய பணியாளர்களையும், ஃபாபோன் நிறுவம் 900 பணியாளர்களையும், பெப்பர்டாப் 1,400 பணியாளர்களையும்  எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ