Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் புதுச்சேரியில் புதிய மண்டல அலுவலகம் திறப்பு

 இந்தியாவின் முன்னனி பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ்  தற்போது தன் 28ஆவது மண்டல அலுவலகத்தை புதுச்சேரியில் துவங்கியுள்ளது.
 
ஒரு யூனியன் பிரதேசத்தில் மண்டல அலுவலகத்தை துவங்கும் முதல் பொதுத்துறை நிறுவனம் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் மூலம்  புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளை நிர்வகிக்கும். 
 
இந்த நிறுவனம் 2014 - 2015 நிதி ஆண்டில் ரூ.10,650 கோடி ரூபாய் என்கிற பிரீமியம் இலக்கை அடைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ