Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தையில் நிறுவனங்களின் நடவடிக்கைகள்

பட்டியலிட்டப்பட்ட வங்கிப் பங்குகளில் 33 வங்கிகளில் பொதுத் துறையை சேர்ந்த ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் பங்கு முதலீடு 9 சதவிகித்துக்கு மேல் இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு ரூ. 83,069 கோடி. மிக அதிகமாக கார்ப்பரேஷன் வங்கியில் 22.54% பங்குகளில் எல்ஐசி முதலீடு செய்துள்ளது. அடுத்த இடங்களில் பேங்க் ஆஃப் இந்தியா (14.93%), சென்ட்ரல் பேங்க் (13.41%), ஆக்ஸிஸ் பேங்க் (12.69%), எஸ்பிஐ (11.82%) ஆகிய வங்கிகள் உள்ளன. 

ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் பங்குகளில் முதலீட்டை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.  மேலும் சிக்கலில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ரிஸ், ஐடிசி நிறுவனப் பங்குகளிலும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முடிந்த மாதத்தில் முதலீட்டை அதிகரித்துள்ளன. அதேநேரத்தில் லூபின் பார்மா, டிசிஎஸ், மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் போன்ற நிறுவனப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்துள்ளன.
 
பயோகான் குழுமத்தின் ஒரு நிறுவனமான ஷைஜெனி ஐபிஓ வரத் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் ஜூலை மாதம் வாக்கில் ஐபிஓ மூலம் ரூ. 1,000 கோடி திரட்டுகிறது.  அனுமதி வேண்டி செபி அமைப்புக்கு விண்ணப்பித்திருக்கிறது.  
 
 பிராவிடெண்ட் ஃபண்ட் அமைப்பு மொத்தம் நிர்வகிக்கும் ரூ. 6.5 லட்சம் கோடியில் சுமார் ரூ. 17,000 கோடி நடப்பு நிதி ஆண்டில் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் முதலீடு (இடிஎஃப்கள்) செய்யக் கூடும். இதற்கான அறிவிப்பை மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என   எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மிகவும் குறைவு என எஸ்பிஐ ஆய்வறிக்கையில் சொல்லி இருப்பது கவனத்திற்குரியது. இது ஜிடிபியில் 2012-13-ல்  4.8%ஆகவும், 2013-14-ல் 1.7% ஆகவும் இருந்தது. 2014-15 ம் ஆண்டில் இது மீண்டும்  1.7% ஆக குறைந்திருக்கும் என எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ