Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷேர்லக்: சந்தையை சரியவைத்த மேட்!

ம் கேபினுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, ‘‘பங்குச் சந்தை நிபுணர் டாக்டர் எஸ்.கார்த்திகேயனுக்கு என் வாழ்த்துகள். கடந்த வாரம் நிஃப்டி 300 புள்ளிகள் இறங்கலாம் என்று சொல்லி இருந்தார். மிகச் சரியாக 300 புள்ளிகள் இறக்கம் கண்டிருக்கிறது’’ என்று ஆச்சரியப் பட்டார் ஷேர்லக். ‘‘ஆனால் அவர், வாங்க வேண்டிய / விற்க வேண்டிய பங்குகள் பகுதிக்கு அப்போதைக்கப்போது லீவு விட்டுவிடுகிறாரே, ஏன்?’’ என்று கேட்டபடி நம் எதிரில் அமர்ந்தார் ஷேர்லக்.

‘‘இதே கேள்வியை நாங்களும் அவரிடம் கேட்டோம். சந்தையின் போக்கு பலவீனமாக இருக்கும் என டெக்னிக்கல்கள் மூலம் உறுதியாக தெரியவரும் போது, இந்த பகுதியைத் தரமுடியாமல் போய்விடுகிறது. உதாரணமாக, இந்த வாரம் சந்தை பலவீனமாக இருந்ததால், அந்தப் பகுதியைத் தரவில்லை. நான் எதிர்பார்த்த மாதிரியே இந்த வாரம் முழுக்க சந்தை பாரதூரமாக இறங்கியது. இந்த சமயத்தில் வாங்க வேண்டிய பங்குகளை தந்திருந்தால், நஷ்டம்தானே ஏற்பட்டிருக்கும்! வாங்க வேண்டிய பங்குகளைத் தராவிட்டாலும், விற்று வாங்க வேண்டிய பங்குகளை சொல்லலாமே என்று சிலர் கேட்கிறார்கள். விற்று வாங்க வேண்டிய பங்குகளுக்கான ஆயுள் வெறும் ஐந்து மணி நேரம் மட்டுமே. இதற்குள் ஒரு பங்கின் விலைப்போக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். தேர்ந்த டிரேடர்களால் மட்டுமே இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்பதால், அதை எல்லோருக்கும் சொல்வதில்லை. சந்தை வீக்காக இருக்கும்போது எல்லாம், இனி இந்தப் பகுதியை நான் தரமாட்டேன் என்று விளக்கம் தந்தார் அவர்’’ என்று நாம் ஷேர்லக்கிடம் சொன்னோம்.

‘‘வாசகர்களின் நலனை நினைத்து செயல்படும் உமக்கும் அவருக்கும் ஒரு பெரிய ஹேட்ஸ் ஆப்’’ என்று பாராட்டியவரிடம் செய்திகளைக் கறக்க ஆரம்பித்தோம்.

‘‘முதலில் காலாண்டு முடிவுகளைச் சொல்லுங்கள்’’ என்றோம்.

‘‘அதிகக் கடன் வளர்ச்சி, வட்டி சாரா வருமான அதிகரிப்பால் யெஸ் பேங்க்-ன் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 28% அதிகரித்து ரூ. 551 கோடியாக உயர்ந்துள்ளது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு 75% அதிகரித்துள்ள நிலையிலும் நிகர லாபம் உயர்ந்துள்ளது. முடிந்த நிதி ஆண்டில் இந்தத் தனியார் வங்கியின் நிகர லாபம் சாதனை அளவாக 24% அதிகரித்துள்ளது. இந்த வங்கி பங்கு விற்பனை மூலம் 6,300 கோடி ரூபாயை அயல் நாட்டிலிருந்து  திரட்டத் திட்டமிட்டு இருக்கிறது. மேலும், இந்த வங்கியில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீட்டு வரம்பு 49%-லிருந்து 74%-ஆக அதிகரிக்க வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. அந்த வகையில் இந்தப் பங்கை முதலீட்டுக்காக கவனிக்கலாம்.

கடன் வளர்ச்சி மற்றும் நிகர வட்டி வரம்பு அதிகரிப்பு போன்றவற்றால் நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிகர லாபம் சந்தை எதிர்பார்ப்பைவிட அதிகமாக அதாவது, 21% அதிகரித்து ரூ.2,807 கோடியாக உயர்ந்துள்ளது.
சந்தை எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விப்ரோவின் நிகர லாபம் வெறும் 3.6%தான் அதிகரித்து உள்ளது. சர்வதேச அளவில்    எரிசக்தி விலை மற்றும் ஃபாரக்ஸ் இழப்பு போன்றவற்றால் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மிகக் குறைவாக அதிகரித்துள்ளது. இன்னொரு ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 4.7% குறைய, அந்தப் பங்கின் மதிப்பு ஒரே நாளில் ரூ.14,000 கோடி (5.95%) அளவுக்கு வீழ்ச்சிக் கண்டது’’ என்றார். 

‘‘பருவ மழை சந்தையை சாய்த்துவிடும் போலிருக்கிறதே!’’ என்றோம்

 

மேலும் படிக்க விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ