Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போலி பட்டா உள்ள வீட்டை எப்படி விற்பது.

 ?நான் சென்னை ராயப்பேட்டையில் 13 வருடங்களுக்கு முன்பு ஒரு வீடு வாங்கினேன். தற்போது இந்த வீட்டுக்கான பட்டா போலியானது என்று தெரிய வந்தது. இந்த சொத்தை எப்படி விற்பது?

என்.கணேஷ்குமார், சென்னை,

சுரேஷ்பாபு, உயர் நீதிமன்ற வழக்குரைஞர்.

‘‘மனைக்கான தாய் பத்திர விவரங்களை மீண்டும் ஒருமுறை சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும். அதன்பிறகு தாசில்தார் அலுவலகத்தில் உங்களுக்கு எப்படி போலியாக பட்டா வழங்கப்பட்டிருக்கிறது என்பதை விசாரியுங்கள். உங்களுக்கு சொத்தை விற்றவர், பவர் ஏஜென்ட் /புரோக்கர் மீது உங்களை ஏமாற்றியதாக போலீஸிடம் புகார் கொடுங்கள். இந்த நடவடிக்கைகளுக்கு பின்புதான் சொத்து உங்களுடையதா என்பது தெரியவரும். இந்த சொத்து உங்களுடையதுதான் என்று பட்டா மற்றும் முனிசிபாலிட்டி ரெக்கார்டுகளின் மூலம் நிரூபிக்கப்படவில்லை என்றால் நீங்கள் வேறு ஒருவரிடம் ஏமாந்து கொடுத்த தொகையை மீட்கத்தான் இப்போது இந்த சொத்தை விற்கிறீர்கள் என்று குற்றம் சுமத்தப்படுவீர்கள். இதுபோன்ற பிரச்னைகளுக்கு உங்களிடமிருக்கும் ஆவணங்களுடன் நல்ல அனுபவமுள்ள வழக்குரைஞரை அணுகுவது நல்லது.’’

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ