Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடப்பு நிதி ஆண்டின் சராசரி சம்பள உயர்வு 10.7%!

சர்வதேச கன்சல்டன்ஸி நிறுவனமான Deloitte's Annual Compensation & Benefits Trends என்ற நிறுவனம், நடப்பு 2015-16-ம் நிதி ஆண்டில் இந்திய பணியாளர்களுக்கு கொடுக்கும் சம்பள உயர்வு எப்படி இருக்கும் என்பதை தான் மேற்கொண்ட சர்வே மூலம் தெரியப்படுத்திருக்கிறது. இதில் சென்ற நிதி ஆண்டில் இருந்த சம்பள உயர்வு விகிதத்தை விட 0.4% அதிகரித்து, நடப்பு நிதி ஆண்டில் சராசரி சம்பள உயர்வு விகிதம் 10.7 சதவிகிதமாக இருக்கும் என்றும், இந்த சம்பள உயர்வால் ஜூனியர் பணியாளர்கள் அதிகமாக பயனடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு 2015-16-ம் நிதி ஆண்டில் பார்மா துறை சார்ந்த நிறுவனங்கள் 12.1% அதிகபட்ச சம்பள உயர்வையும், ரீடெய்ல் துறை சார்ந்த நிறுவனங்கள் 9.4% சம்பள உயர்வையும் வழங்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சர்வேயில் இந்தியாவின் முக்கிய 18 துறைகளும், 250 நிறுவனங்களும் பங்குபெற்றிருக்கின்றன. பேங்கிங், ஃபைனான்ஷியல் சர்வீஸ் மற்றும் இன்ஷூரன்ஸ் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகபட்சமாக 19.4% சம்பள உயர்வையும், குறைந்தபட்சமாக 15.6% சம்பள உயர்வையும் எதிர்பார்ப்பதாக சர்வே விவரம் தெரிவிக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ