Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆதார் அட்டை உலகின் மிகப்பெரிய டேட்டாபேஸ்!

ஆதார் அட்டை உலகின் மிகப்பெரிய பயோ மெட்ரிக் டேட்டா பேஸாக மாறியுள்ளது. தனிநபர் அடையாள அட்டையாக இருக்கும் இந்த ஆதார் கார்டுகள் இதுவரை இந்தியாவில் 82 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
 
இதுவரை உள்ள தகவல்களின் படி எஃப்பிஐ அமைப்பிடம் 15 கோடி பேரின் பயோமெட்ரிக் டேட்டாஃபேஸ்கள் சேமிக்கப்பட்டு உள்ளன. இதனை இந்தியாவின் ஆதார் அட்டை முறியடித்து 81.67 கோடி அட்டைகளை வழங்கியுள்ளனர். இதில் அனைவரது பயோ மெட்ரிக் தகவல்களும் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மக்கள் தொகையில் 67 சதவிகிதம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கட்டுள்ளன.
 
இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் அதிகபட்சமாக 10.48 கோடி பேருக்கும், மஹாராஷ்டராவில் 9.19 கோடி பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற இலக்கில் ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
 
சென்ற மே மாதம் மோடி அரசு பதவியேற்றவுடன் இந்தியாவில் ஆதார் கார்டுகள் திட்டம் நிறுத்தப்படும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் இதன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நந்தன் நிலகனியின் அறிவுறையின் பேரில் மோடி அரசு இந்த திட்டத்தை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. 
 
மத்திய அரசு மானியங்களை நேரடியாக வழங்குவதில் இந்த எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதுவரை 10 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. மாதம் 2 கோடி புதிய ஆதார் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதன் படி உலகின் மிகப்பெரிய பயோ மெட்ரிக் காட்டு என்ற பெருமையை ஆதார் பெற்றுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ