Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கச்சா எண்ணெய் விலை! ஒரு பேரல் 80 டாலர்?

கச்சா எண்னெயின் விலை கடந்த ஒரு மாதகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு பேரல் 65 டாலருக்கு வர்த்தகமாகி வரும் கச்சா எண்ணெய் வரும் மாதத்தில் அதிகரித்து ஒரு பேரல் 80 டாலர் அளவுக்கு செல்லலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
இந்த வருட துவக்கத்தில் ஒரு பேரல் 45 டாலர் என்ற அளவுக்கு குறைந்து வர்த்தகமானது. தற்போது அந்த நிலையிலிருந்து மீண்டு 40 சதவிகிதம் விலை அதிகரித்து வர்த்தகமாகிறது. டாலரின் மதிப்பு குறைந்து வருவது கமாடிட்டி சந்தைகளுக்கு சாதகமான விஷயம் என்பதால் கச்சா எண்னெய் மற்றும் உலோகங்களின் விலை சற்று அதிகரித்து வர்த்தகமாகிறது.
 
அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகளும், எமன் பிரச்னையாலும் எண்ணெய் உற்பத்தி நிலையங்களிலிருந்து வரத்து தடைபட்டுள்ளது இதனால் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வர்த்தகமாகிறது. எனவே வரும் 3-6 மாதத்தில் கச்சா எண்ணெயின் விலை உயரவே வாய்ப்புள்ளதால் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 80 டாலருக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close