Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகரித்தது ஆப்பிள் லாபம்!

மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் நேற்று அதன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதன்படி ஆப்பிளின் லாபம் இந்த ஆன்டு 33% சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது சென்ற ஆண்டைவிட லாபம் இந்த ஆண்டு 13.6 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆப்பிளின் பணக்கையிருப்பு 193 பில்லியன் டாலராக உள்ளது.

 
இதற்கு முக்கிய காரணம் சீனாவில் ஆப்பிள் போன்களின் விற்பனை அதிகரித்ததும், உலக அளவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் விற்பனை விகிதம் அதிகரித்ததே ஆகும். இந்த வருடம் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த வருமானம் 58.01 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது சதவிகிதத்தில் 27 சதவிகிதமாக உள்ளது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிக் குக் கூறுகையில்'தற்போது மக்களிடம் ஐபோன்களுக்கு மாறும் பழக்கம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஆப்பிள் வாட்சின் விர்பனை பற்றி எதுவும் கூறாவிட்டாலும். அவற்றின் விற்பனை எதிர்பார்த்தபடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
அதேசமயம் ஐபோன் விற்பனை 40 சதவிகிதமும், ஐபேட் விற்பனை 23 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close