Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த முதலீடுகளை தொடரலாமா....?

 ?எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். 15 வருடம் கழித்து அவர்களின் உயர்கல்விக்கும், திருமணத்துக்கும் பணம் தேவை. ஹெச்டிஎஃப்சி டாப் 200 டைரக்ட் ஃபண்டில் ரூ.1 லட்சம்,  ஐசிஐசிஐ புரூ ஃபோகஸ்டு புளூசிப் ஈக்விட்டி குரோத் ஃபண்டில் ரூ.75,000, ஐசிஐசிஐ புரூ டைனமிக் பிளான் குரோத் ஃபண்டில் ரூ.75,000, பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி டைரக்ட் குரோத் ஃபண்டில் ரூ.1 லட்சம், யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட் குரோத் ஆப்ஷனில் ரூ.50,000 மற்றும் யூடிஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி சீரிஸ்2 குரோத் ஃபண்டில் ரூ.50,000 முதலீடு செய்துள்ளேன். மேலும், யூடிஐ டிவிடெண்ட் யீல்டு ஃபண்டில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்ய உள்ளேன். 15 வருட முடிவில் எனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? 

எஸ்.ராகவன், ஈரோடு,

ஆர்.ராதாகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

‘‘நீங்கள் டைவர்ஸிஃபைடு ஃபண்டுகளில் முதலீடு செய்து வருவதால், குறைந்தபட்சம் ஆண்டுக்கு 12% வருமானம் கிடைக்கும். உங்களுடைய தற்போதைய மொத்த முதலீடு ரூ.4.5 லட்சம். இந்தத் தொகை 15 வருடம் கழித்து தோராயமாக ரூ.25 லட்சமாக அதிகரித்திருக்கும். எஸ்ஐபி முறையில் நீங்கள் மாதம் ரூ.5,000 முதலீடு செய்ய இருக்கிறீர்கள். இந்த முதலீட்டுக்கும் 15 வருடம் கழித்து ஆண்டுக்கு 12% வருமானத்தில் ரூ.23.5 லட்சம் கிடைக்கக்கூடும். இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கும். ஆனால், நீண்ட காலத்தில் நல்ல வருமானம் தர அதிக வாய்ப்புள்ளது. எனவே, சந்தையின் ஏற்ற இறக்கத்தை பொருட்படுத்தாது தொடர்ந்து இதே ஃபண்டுகளில் முதலீடுகளை தொடரலாம்.’’

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ