Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நோக்கியா ரிடெயில் ஸ்டோர்ஸை ரீ-பிராண்டிங் செய்கிறது மைக்ரோசாஃப்ட்

ஏற்கெனவே நோக்கியா செல்போன் உற்பத்தியை  மைக்ரோசாஃப்ட் வாங்கிவிட்ட நிலையில் தற்போது நோக்கியாவின் விற்பனை நிலையங்களான நோக்கியா ரிடெயில் ஸ்டோர்களை மைக்ரோசாஃப்ட் மொபைல் செல்லர்களாக பெயர் மாற்றி ரீ-பிராண்டிங் செய்து வருகிறது மைக்ரோசாஃப்ட். 
 
கூர்கானில் முதல் மொபைல் ஸ்டோரை திறந்து வைத்து பேசிய மைக்ரோசாஃப்ர் மொபைல் விற்பனை பிரிவின் துணை தலைவர் கிரிஸ் வெபர் உலகம் முழுவதும் உள்ள நோக்கிய ஸ்டோர்களை மைக்ரோசாஃப்ட் பெயரில் ரீ-பிராண்டிங் செய்ய இருப்பதாக கூறினார்.
 
 உலகம் முழுவதும் 16000 ஸ்டோர்கள் மாற்றப்பட உள்ளதாகவும் அதில் 9000 ஸ்டோர்கள் இந்தியாவில் இருப்பதாகவும் கூறினார்.மேலும் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் அதிக அளவில் ரீ-பிராண்டிங்கிற்காக முதலீடு செய்வதாகவும், இந்தியா ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற மார்க்கெட் இங்கு அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய முடியும் என்றும் கூறினார்.
 
இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் பிரீமியம் ரக ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டுவர இருப்பதாக மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ