Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்தின் உற்பத்தி குறைவு

தங்கம் 10 கிராம் 42 ரூபாய் குறைந்து  ரூ. 27,041க்கு வர்த்தகமானது.  22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2553 க்கு வர்த்தகமானது.  24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2731க்கு வர்த்தகமானது. 

இந்தியாவின் தங்க உற்பத்தி கடந்த நிதி ஆண்டை காட்டிலும் இந்த நிதி ஆண்டில் 8% சரிந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் அதாவது 2013 - 2014ல் 1.56 டன்னாக இருந்த தங்க உற்பத்தி 2014 - 2015 நிதி ஆண்டில் 1.43 டன்னாக சரிந்திருக்கிறது.  இந்தியாவில் ஹிட்டி கோல்டு மைன்ஸ் (கர்நாடகா) மற்றும் மன்மோகன் இண்டஸ்ட்ரீஸ் ஜார்கன்ட் ஆகிய இரண்டு இடத்தில் மட்டும் தான் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதே போல் 2014 - 2015 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் மட்டும் தங்கத்தின் இறக்குமதி 782 டன்னாக இருந்தது. 2013 - 2014 நிதி ஆண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி மொத்த நிதி ஆண்டிற்க்கும் 662 டன்னாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ