Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோல்துறை - வேலைவாய்ப்புடன் கூடிய ஆரம்ப கட்ட பயிற்சி!

இன்று கால 11 மணி அளவில் சென்னை கிண்டியிலுள்ள திருவிக தொழிற்பேட்டை Central Training Institute for Instructors வளாகத்தில் “தோல்துறை திறன் மேம்பாட்டு  திட்டம்" கூட்டம் நடைபெற்றது. இதில், தோல் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் வேலையில்லா வாலிபர்களுக்கு பயிற்சி அளிக்க தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் தோல்துறை திறன் கழகம் (எல்.எஸ்.எஸ்.சி) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு  முதல்முறையாக காலணி தயாரிப்பு மற்றும் அதுதொடர்பான பணிகளை 2000 வாலிபர்களுக்கு கற்றுத்தந்து வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்திற்கு ஒப்புதல்  வழங்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த மத்திய காலணி பயிற்சி நிலையம் (சி.எஃப்.டி.ஐ) தமிழகத்தின் காலணி தயாரிப்பு தொழிலுக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.

2020-ல் 27 பில்லியன் டாலர் இலக்கு!
தோல் தொழிலின் தாயகமாக விளங்கும் தமிழகம், நாட்டில் உள்ள மொத்த தோல் உற்பத்தியில் 40 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்,சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில்  இவ்வுற்பத்தி நடைபெறுகிறது. காலணிகள்,  மற்றும் தோல் தொடர்பான பல பொருட்கள் இங்கு தயாரிக்கப்பட்டு சர்வதேசஅளவில் முன்னணியில் உள்ள அனைத்து  பிராண்டு வகைகளாக  ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இந்த துறை சுமார் 15 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. பிரதமரின் “மேக் இன் இந்தியா” என்ற பிரச்சாரத்தில் முக்கியமான துறையாக தோல் துறை விளங்குகிறது. 12 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இத்துறை 2020-ல் சுமார் 27 பில்லியன் டாலருக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

வேலைவாய்ப்புடன் கூடிய ஆரம்ப கட்ட பயிற்சி!
"தமிழ்நாட்டில் காலணி, தோலினால் செய்யப்படும் உடைகள் ஆகியவற்றை தயாரிக்க தொழில் திறனுடைய மனித சக்தி தேவை பெரிய அளவில் உள்ளது என்றும்,   தமிழகத்தில் உற்பத்தித்துறைக்கு தேவையான திறன் படைத்த மனிதவளத்தை அளிப்பதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் முன்னணியில் உள்ளது. எனவே எங்களுடன் அவர்கள் இணைந்து செயல்படவேண்டும்" என்றும்தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் திரு.ரஃபீக் அகமது தெரிவித்துள்ளார். எனவே முதல்முறையாக தோல் தொழில்துறை வரலாற்றில் காலணி மற்றும் இதர தோல் பொருட்களை உற்பத்தி செய்ய வேலைவாய்ப்புடன் கூடிய ஆரம்ப கட்ட பயிற்சி அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் ஆதரவு!
தமிழக அரசின் ஊரக தொழில் துறை அமைச்சர் திரு.பி.மோகன், "12.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தோல் தொழில், கச்சாப்பொருள் பற்றாக்குறை மற்றும் மனித சக்தி என இரண்டு விதமான மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. உற்பத்தித்துறையின் மையமாக விளங்கும் தமிழக தோல் தொழிலுக்கு தொழில்திறன்மிக்க மனிதசத்தியின் தேவை தொடர்ந்து தேவைப்படுகிறது. தொழில்திறன்மிக்க தொழிலாளர்களின் திறமையைப் பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தோல் துறை திறன் கவுன்சில், மத்திய காலணி தயாரிப்பு பயிற்சி நிலையம் ஆகியவற்றின்  இந்தமுயற்சி தமிழகத்தில் தோல்துறை மேலும் வளர உதவும். பெண்களுக்கு கணிசமான வேலைவாய்ப்புகளை வழங்கும் தோல் தொழில்துறைக்கு தமிழக அரசு தொடர்நது ஆதரவு அளிக்கும்" என்றும் தெரிவித்திருக்கிறார்.


 

தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலர் திரு. குமார்ஜெயந்த், "தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம் இரண்டு விதமான நோக்கங்களை நிறைவேற்றுகிறது. சமூகத்தில் மிகவும் அடிதளத்தில் உள்ள  சமூகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு உற்பத்திக்கு பங்களிக்கும் வகையில் தோல்தொழில்துறையில் ஆரம்ப கட்ட பணிகளுக்கான தொழில் திறன்மிக்க தொழிலாளர்களையும் வழங்குகிறது. தேசிய திறன் தகுதி வரையறையின்கீழ் தொழிலாளர்கள் சர்வதேச தரத்திலான வேலைகளை மேற்கொள்ளும் வகையில் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்".

இந்த தகவலை தோல் துறை திறன் கவுன்சில் (LSSC) தெரிவித்துள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ