Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்தி ஏர்டெல் : நிகர லாபம் 30% அதிகரிப்பு!

பார்தி ஏர்டெல் நிறுவனம், கடந்த 2014-15-ம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு முடிவை சமீபத்தில் வெளியிட்டது. இதில் நிறுவனத்தின் நிகர லாபம் 30.5% அதிகரித்து 1,255 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது இதற்கு முந்தைய 2013-14-ம் நிதி ஆண்டின் இதே காலாண்டில் 962 கோடி ரூபாயாக இருந்தது. வாடிக்கையாளர்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடமிருந்தும் கிடைக்கும் சராசரி வருவாய் (Average revenue per user - APRU) அதிகரித்திருக்கிறது. இதனால் நிறுவனத்தின் நிகரலாபம் அதிகரித்து காணப்படுவதாக ஏர்டெல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதே போல ஏர்டெல் வாடிக்கையாளர்களின் இன்டெர்நெட் பயன்பாடு அதிகரித்திருப்பதும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாதமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஒரு வாடிக்கையாளரின் சராசரி இன்டெர்நெட் பயன்பாடு 2013-14-ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 133 ரூபாயாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 173 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே போல நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 21.72 கோடியிலிருந்து (மார்ச் 31, 2014 நிலவரப்படி) 22.60 கோடியாக (மார்ச் 31, 2014) அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருமானம் 4% அதிகரித்து 23,016 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 22,219 கோடியாக இருந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ