Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்விட்டர் கேள்வி பதில் நேரம்

தங்கத்தில் முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கிறார் ஜெம் அண்டு ஜுவல்லாரி ட்ரையினிங் சென்டரின் இயக்குநர் சுவாமிநாதன்.

உங்கள் கேள்விகளை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலமாக கேட்கலாம்.

 

1.நகைக் கடையில் மாத தவனயில் பணம் சொலுத்தி 1 அல்லது 2 வருடம் கழித்து நகை வாங்குவது லாபமா?

தங்கம் வாங்க வேண்டும். ஆனால் போதிய பணம் இல்லை என்பவர்கள் மாத தவணையில் பணம் செலுத்தி நகைகளை வாங்கலாம். ஆனால் அது லாபம் தருமா என்றால் லாபமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

2.ஹால் மார்க், கேடிஎம் என்று நகைகளில் என்னென்ன தரத் சான்றிதழ்கள் உள்ளன? எது சிறந்தது?

ஹால்மார்க் தான் தரத்தை குறிப்பது, கேடிஎம் என்பது தங்கத்துடன் இணைப்பானாக இருப்பது அதற்கும் தரத்துக்கும் தொடர்பில்லை, தரத்தை அளக்க ஹால்மார்க் குறியீடு உள்ளதா என்பதை பாருங்கள், அது சரியாக இருந்தால் நம்பிக்கையோடு வாங்கலாம்.

3. தங்க நகைக்கான செய் கூலி, சேதாரம் ஒவ்வொரு கடைக்கும் ஏன் மாறுபடுகிறது? கூலி, சேதாரத்தில் ஏமாறாமல் இருக்க கவனிக்க வேண்டியவைகள் என்னென்ன?

 கூலி, சேதாரம் ஆகியவை அந்த நகைகளில் உள் வேலைப்பாடுகளை பொறுத்தது. ஒரு நகையை செய்யும் போது அதில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்து தான் சேதாரம் அமையும். சில நகைகளுக்கு குறைவான இழப்பு ஏற்பட்டிருக்கலாம், சில நகைகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டிருக்கலாம். அதனால் அவர்களது இழப்பை பொறுத்து இவை அமையும்

அதிக சேதாரத்தை தவிர்க்க நான்கு, ஐந்து கடைகளில் விசாரியுங்கள் உங்களுக்கு எது குறைவாகவும், சரியாகவும் தோன்றுகிறதோ அந்தக் கடையை தேர்ந்தெடுத்து வாங்குகள். கூடிய வரைக்கும் கல் நகைகளை தவிர்க்க பாருங்கள்.

4 .தங்கத்தில் நீண்ட கால முதலீடு செய்வதற்கு கோல்ட் இடிப் பண்டு அல்லது தங்க நாணயங்கள். எது சிறந்தது?

இந்த இரண்டில் இடிஎஃப் தான் சிறந்தது. முதலீடு என வரும் போது அதனை தங்கமாக வாங்கி வைத்திருக்காமல் பேப்பர் கோல்டு எனப்டும் இடிஎஃப்பில் சேமிப்பது தான் சிறந்தது.

5. தற்போது உள்ள நிலையில் இருந்து தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்குமா? குறையுமா?

தற்போது உள்ள நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் வர்த்தகமாகும். தங்கத்தின் விலையில் அதிக ஏற்றம் இருக்காது. அதேசமயம் பெரிய அளவில் மாற்றங்கள் இன்றி நிலையாக வர்த்தகமாகும்.

6. தங்கத்தை சேமிப்புக்காக வாங்கலாம் என்ற எண்ணம் உள்ளது. நகைகளாக வாங்கலாமா அல்லது கோல்டு பார்களாக வாங்கலாமா?

 சேமிப்பு என்று வந்தால் தங்கத்தை நகைகளாக வாங்காமல் பார்களாக வாங்குவது தான் சிறந்தது. நகைகளாக வாங்கினால், சேதாரம், செய் கூலி போன்றவை இருக்கும் அதே சமயம் பார்களாக வாங்கும் போது அந்தச் செலவுகள் இல்லாமல் வாங்கலாம் அல்லது குறைவாக இருக்கும். அதனை காட்டிலும் சேமிப்பு என வரும் போது கோல்டு இடிஎஃப் சிறந்தது.

 7. தங்க நகையின் தரத்தை சோதிக்க சில நகைக் கடைகள் இயந்திரங்களை வைத்துள்ளன. அவை சரியாக தான் சோதிக்கின்றனவா அல்லது அப்ரைஸர்கள் சோதிப்பது சரியா?

இயந்திரங்கள் பல இடங்களில் தங்கத்தின் தரத்தை அறிய பயனபடுத்தப்படுகின்றன. ஆனால் அவை ஓரளவுக்கு தான் சரியான முடிவுகளை கூறும், இந்த இயந்திரங்களின் முடிவுகள் 40% சரியானதாக இருக்கும். அதே சமயம் அப்ரைஸர்கள் சோதிப்பது 90 சதவிகித சரியான முடிவுகளை தரும், இயந்திரங்களை விட அப்ரைசர்கள் சோதிப்பது சரியாக இருக்கும்.

8.வெளிநாட்டில் தங்கம் குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்கிறார்கள். நம்பி வாங்கலாமா?

தனி நபர் அல்லது மூன்றாம் நபர் தருவதை நம்பி வாங்க வேண்டாம். ஆனால் நிறுவனங்கள் மூலம் சரியான முறையில் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால் வாங்கலாம். அந்த நிறுவனத்தின் பாரம்பரியம் குறித்து விசாரித்து வாங்குவது நல்லது.

9.போலி நகைகளை கண்டறிய என்ன வழிமுறைகள் உள்ளன?

ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்று பாருங்கள், அதில் ஐந்து சீல்கள் இடம் பெற்றிருக்கிறதா என்பதை சரிபாருங்கள். அப்படி இருக்கும் போது முறையான வரி செலுத்தி பில்லை வாங்கி வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை போலி நகை எனில் அந்த நிறுவனத்திடம் முறையிட அது ஏதுவாக இருக்கும். நல்ல தங்கம் என்று யாராவது தனி நபர் விற்கும் நகைகளை வாங்காதீர்கள். பெரும்பாலான போலி நகைகள் இப்படி தான் விற்கப்படுகின்றன. முறையான அப்ரைஸரிடம் சென்று நகையை வாங்கும் முன் சரி பார்த்து வாங்குவது சிறந்தது.

 

10. நான் அண்மையில் நகை வாங்கினேன், 22 காரட்க்கு பதில் 18 காரட் தான் இருந்தது. இது குறித்து யாரிடம் புகார் செய்வது, ஏற்பட்ட இழப்பை எப்படி சரிகட்டுவது?


முதலில் உங்ளுங்களிடம் இருக்கும் நகை ஹால்மார்க் நகை தானா என்பதை சரிபாருங்கள். நகை ஹால் மார்க்காக இருந்தால் இந்திய தர நிர்ணய அமைவனத்திடம் (பிஐஎஸ்) புகார் தெரிவிக்கலாம். ஹால்மார்க் இல்லாத போது நகை வாங்கிய கடை, கொடுத்த பில்லை வைத்து நுகர்வோர் நீதி மன்றத்தில் முறையிடலாம்..

11. தங்க நாணயங்களை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்க முடியுமா? எத்தனை சதவிகிதம் கடனாக கிடைக்கும்?

 
வாங்க முடியாது, தங்க நானயத்திற்கு கடன் கொடுக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கியின் சட்டம் சொல்கிறது. நடைமுறையில் தங்க நாணயங்களில் செம்பிலோ, வெள்ளியிலோ தங்கத்திலோ, ஒரு ஹீக் வைத்தால் டாலராக கருதப்படும். எனவே அந்த டாலரின் மூலம் கடன் வாங்கலாம். வங்கி கிராமிற்கு நிர்ணயித்துள்ள கடன் தொகையை முழுமையாக வாங்கலாம்.

 

12. கடந்த ஆண்டில் இதே தேதியில் (ஏப்ரல் 29, 2014) தங்கத்தில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று (ஏப்ரல் 29,2015) அதன் மதிப்பு ரூ. 89,000 தான். நீண்ட காலத்தில் தங்கம் லாபகரமான முதலீடாக இருக்குமா? மற்ற முதலீடுகளைவிட தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா


உங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தை ஒரு சிறு பகுதியாக மட்டுமே வைத்துக் கொண்டால் போதும். அதுமட்டுமின்றி தங்கத்தை முதலீடாக பார்க்காமல் உங்கள் தேவைக்கு மட்டும் வாங்குங்கள்.

13.தங்கத்தின் மீதான முதலீட்டின் வருமானம் 2015 வருட இறுதியில் எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

மிகப் பெரிய அளவுக்கு விலை ஏற்றம் இருக்க வாய்ப்பில்லை. சொல்லப்போனால் விலை இறக்கத்திற்கு வேன்டுமானால் வாய்ப்பு இருக்கிறது.

14.தங்க நகைகளுக்கு மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றனவே சரியா?


சரி தான், போன தலைமுறை நபர்கள் குழந்தை பிறந்ததிலிருந்து நகைகளை சேர்க்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் நகைகளை சேர்க்காமல் தங்கக் கட்டிகளை வாங்குகிறார்கள். விலை குறையும் போது அதிக தங்க கட்டிகளை வாங்குவதும், அவசர தேவைகளின் போது விற்றும் தங்கள் நிதித் தேவைகளை சமாளித்துக் கொள்கிறார்கள். திருமணத்தின் போது சேர்த்த தங்க கட்டிகளை நகைகளாக செய்து கொள்கிறார்கள்.

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ