Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சம்பள உயர்வை அதிகப்படுத்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்!

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பேடிஎம் (Paytm), வூகெர் ( Wooqer), மைரெஃப்ரஸ் (MyRefers) மற்றும் ஷாப்குளூஸ் (ShopClues)மற்றும் போன்ற நிறுவனங்கள் தங்களின் சிறந்த பணியாளர்களுக்கு, நடப்பு அப்ரைசலில் அதிக சம்பள உயர்வை வழங்கி இருக்கின்றன. சம்பள உயர்வு மட்டுமில்லாமல் போனஸ் மற்றும் பணியாளர்கள் பங்கு உரிமத்தையும் வழங்கி இருக்கின்றன.

மொபைல் ரீசார்ஜ் சர்வீஸை சிறப்பாக வழங்கி வரும் நிறுவனமான Paytm தனது பணியாளர்களுக்கு 50%-க்கு கூடுதலான சம்பள உயர்வை வழங்கி இருக்கிறது. அதெ போல வூகெர் நிறுவனமும் தனது பணியாளர்களுக்கு 120% சம்பள உயர்வை வழங்கி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த நிறுவனம் சிறப்பாக பணியாற்றிய ஏழு டாப் பணியாளர்களுக்கு மாலத்தீவுக்கு சென்று வர சுற்றுலா ஏற்பாட்டை செய்து கொடுத்திருக்கிறது. அத்துடன் பணியாளர்ககளுக்கு பங்குகளை Employee Stock Ownership Plan  மூலம் பங்குகளை ஒதுக்கி கொடுத்திருக்கிறது.

விங்கிஃபை (Wingify) டேலன்ட்பேட் (Talentpad) என்கிற நிறுவனங்களும் தனது பணியாளர்களுக்கு வழங்கி இருக்கும் சம்பள உயர்வு முறையே 40% மற்றும் 50%-ஆக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ