Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நேபாளத்திற்கு மாட்டிறைச்சி அனுப்பிய பாகிஸ்தான்

 
நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாள நாட்டுக்கு பல நாடுகளில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் இருந்தும் விமானம் மூலம் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த உணவு போட்டலங்களில் உண்ணத் தகுந்த மாட்டிறைச்சிகளும் இருந்திருக்கிறது. நேபாளர்கள் மாட்டிறைச்சியை தொட மறுத்திவிட்டனர்.
 
நேபாள நாடு இந்து தர்மத்தை கடைபிடிக்கும் நாடு. அங்கு பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில் நேபாளத்திற்கு  பாகிஸ்தானில் இருந்து மாட்டிறைச்சி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி நேபாள அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், அதில் மாட்டிறைச்சி அனுப்பியது உறுதி செய்யப்பட்டால் இதுபற்றி பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ