Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய தரகுக் கட்டணம் எப்படி கணக்கிடுவது

 ?நான் முன்னணி தரகு நிறுவனம் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். இதனால் என் வருமானம் குறையுமா? தரகு நிறுவனம் எவ்வளவு சதவிகித வருமானத்தை தரகுக் கட்டணமாக எடுத்துக்கொள்ளும்?

ப.சுவாமிநாதன், திருநெல்வேலி.
 
என்.சத்தியமூர்த்தி, ரிசர்ச் அனலிஸ்ட், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.
 
‘‘ஒவ்வொரு தரகு நிறுவனமும் குறிப்பிட்ட தொகையை முதலீட்டாளர்களிடமிருந்து தரகுக் கட்டணமாக வசூலிக்கிறது. இந்த தரகுக் கட்டணம் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறும். எனவே, இவ்வளவுதான் தரகுக் கட்டணம் என்று குறிப்பிட்டு கூற இயலாது. ஆனால், உங்களிடமிருந்து தரகுக் கட்டணமாக வசூலிக்கும் தொகை எவ்வளவு என்பது உங்கள் பரிவர்த்தனை ஸ்டேட்மென்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து நீங்கள் தரகுக் கட்டணத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
 
பொதுவாக, ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அப்ஃப்ரன்ட் மற்றும் டிரையல் கமிஷனாக ஒரு தொகையைத் தரகர்களுக்கு வழங்குகிறது. எனவே, சொற்பமான தொகையையே கட்டணமாக வசூலிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் உங்கள் லாபம் பெரிதாகக் குறைய வாய்ப்பில்லை.”
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ