Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யார் பெயரில் வீட்டுக் கடன் வாங்கலாம்... எப்படி வரி சேமிக்கலாம்.

 ?என் தந்தை மாதம் ரூ.25,000 பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார். என் மாத சம்பளம் ரூ.45,000. என் சம்பளம் மற்றும் என் தந்தையின் பென்ஷனை கணக்கில் கொண்டு ஒரு சொந்த வீடு கட்ட வங்கியில் கடன் வாங்க இருக்கிறேன். இப்படி வாங்கும் வங்கிக் கடனுக்கு எப்படி வருமான வரிச் சலுகை பெறுவது?

 
எஸ்.ரவிகுமார், திருச்சி.
 
மனோஜ் குமார், ஆடிட்டர்.
 
‘‘இந்த பென்ஷன் தொகையை மட்டும் வைத்து கணக்கிட்டால், உங்கள் தந்தையின் ஆண்டு வருமானம் 3  லட்சம் ரூபாய். மூத்த குடிமக்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகை இருக்கிறது. எனவே நீங்கள் உங்கள் பெயரிலேயே வீட்டுக் கடனை வாங்குவது நல்லது. அதிகக் கடன் தொகை வேண்டும் என்றால் மட்டும் உங்கள் தந்தையின் பெயரை கோ-அப்ளிகேன்டாக (Co-applicant) சேர்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் கட்டப் போகும் வீட்டில் நீங்களே குடியிருக்கும்பட்சத்தில் வருமான வரி பிரிவு 24-ன் கீழ் வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகையில் 2 லட்சம் ரூபாய் வரையும், 80C பிரிவின் கீழ் வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் அசல் தொகையில் ரூ. 1.5 லட்சம் வரையும் ஒரு நிதி ஆண்டில் வரிச்    சலுகையாக பெறலாம்.”
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ