Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த முதலீடுகள் சரியா...?

 ?என் வயது 45, நான் கடந்த ஓராண்டு காலமாக பிர்லா சன்லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் குரோத், டிஎஸ்பி பிளாக்ராக் டாப் 100 ஈக்விட்டி ஃபண்ட் குரோத், ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் குரோத், ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் குரோத், யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் குரோத் ஆகிய ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் தலா 1,000 ரூபாய் வீதம் முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா, இந்த முதலீடுகள் என் ஓய்வுக்காலத் தேவைகளைப் பூர்த்திச் செய்வதாக இருக்குமா?

ம.நடராஜன், தஞ்சாவூர்.
 
யூ.என்.சுபாஷ், நிதி ஆலோசகர்.
 
‘‘நீங்கள் இந்த ஃபண்டுகளிலேயே முதலீட்டை அடுத்த 15 ஆண்டுகளுக்குத் தொடரலாம். இந்த ஃபண்டுகள் அனைத்தும் நீண்ட  காலங்களில் 16 -22% வரை வருமானம் கொடுத்திருக்கிறது. வரும் ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படும் என்று பல சர்வதேச நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. எனவே, இதுபோன்ற ஃபண்டுகள் அடுத்த 15 ஆண்டுகளுக்கு சிறப்பாகச் செயல்பட்டு இதே வருமானத்தைத் தர அதிக வாய்ப்புள்ளது.
இந்த ஃபண்டுகளில் 15 வருட முடிவில் நீங்கள் மொத்தம் 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். ஆண்டுக்கு 17% வருமானம் கிடைத்தால், 15 வருட முடிவில் அது ரூ.36,21,489-ஆக திரும்பக் கிடைக்கும். இந்தத் தொகையை 8% வருமானம் தரக்கூடிய பாதுகாப்பான ஃபண்டில் முதலீடு செய்தால், மாதத்துக்கு 24,143 ரூபாய் கிடைக்கும். இந்தத் தொகை உங்கள் ஓய்வுக்காலத் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்காது என்றால், முதலீட்டின் தொகையை அதிகரிக்க வேண்டும் அல்லது முதலீட்டுக் காலத்தை அதிகரிக்க வேண்டும்.”
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close