Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடனுடைமை

 

- மு.எ.பிரபாகரபாபு, துணை மண்டல மேலாளர் (நிறைவு), பேங்க் ஆப் இந்தியா
கடனுடைமை 
1 . கடன்எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்    
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று 
 
கடன்பட்டு வாழ்வதே இல்வாழ்க்கை  என்றானது. அதுவும் பிறர் பழிப்பதுபோல் இல்லாமல் இருந்தால் ரொம்பவும் நல்லது. 
 
 
 
 
2 . அன்பும் கடனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது 
 
உறவுக்காக அன்பும், பகட்டுக்காக கடனும் இருந்தால்தான் இல்லற வாழ்க்கை என்றாகிவிட்டது. அந்த வாழ்க்கையே  பண்பும் பயனும் உள்ளதாக ஆகிப்போனது! 
 
3. கடன் புரிந்த இல்உளோர்க்கு இல்லை இகழ்வார்முன் 
ஏறுபோல் பீடு நடை 
 
கடன்கள்  நிறைந்த குடும்பத்தைக் கொண்டோர்க்கு என்றுமே இல்லை,  சிங்கம் போல் ஒரு பெருமித  நடை! 
 
4 .சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் கடனில்  
நிறைகாக்கும் காப்பே தலை 
 
சிறையைக் காவல் செய்யும் வேலை எவரும்  செய்யக்கூடும். கடன் வாங்கிவிட்டு  தன் அரிய பெருமையைக் காத்துக்கொள்ளும் காவல் வேலையே  தலை சிறந்ததாகும். 
 
5. மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் 
 நன்கடன் நன்மக்கட் பேறு  
 
நல்ல கடன், நல்ல குழந்தைச் செல்வங்கள் உள்ள இல்லறத்தை மட்டுமே, மங்கலமான இல்லறம் என்று  சொல்வார்கள்!   
 
6. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கட் கடன். 
 
கடன் பெற்று பழிக்கு ஆளாகாத  பண்புடைய மக்கள் பெறுகிற கடன், ஏழு பிறவிகளும் தீமையைத் தீண்டாது!  
 
7. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்  
துணைவலியும் தூக்கிக் கடன் 
 
தான் மேற்கொண்ட செயலின் வலிமையையும், தனது வலிமையையும், போட்டிக்காரனின் வலிமையையும், தனக்கு துணையாய் இருப்போரின் வலிமைகளையும் ஆராய்ந்து கடன் வாங்குவதே நல்லது.
 
8 ஞாலம்  கருதினும் கைகூடும் காலம் 
கருதி இடத்தால்  கடன் 
 
தக்க காலத்தை கருத்தில் கொண்டு வாங்கிய சிறந்த கடனாக இருந்தால், இந்த உலகத்தையே பெற நினைத்தாலும் அது நிறைவேறும்!
 
9. நுண்மான் நுழைபுலம் இல்லான் கடன்கொளல் 
மண்பாண் புனைபாவை அற்று 
 
நுட்பமாக உட்சென்று ஆராயும் திறமை இல்லாதவன் கடன் வாங்குவது, மண்ணால் செய்த அழகிய பொம்மையை கையில் வைத்திருப்பது போலாகும்! 
 
10. தன்னைத்தான் காக்கின் கடன்காக்க காவாக்கால் 
தன்னையே கொல்லும் கடன். 
 
தன்னை ஒருவன் காத்துக்கொள்ள வேண்டுமென்றால் முதலில் அவன் வாங்கிய கடனைக் காத்துக்கொள்ள வேண்டும். அப்படி காக்காவிட்டால் அவனையே கொல்லவும் கூடும் அந்தக் கடன்! 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ