Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நகர்புறத்தில் கார் விற்பனை 19% உயர்வு...!

 

 
நகர்புறங்களில் வசிப்பவர்கள் கார் வாங்கும் எண்ணிக்கை  2015 ஏபரல் மாததம் 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  2014 ஏப்ரல் மாதத்தில் விற்பனை வளர்ச்சியானது 6.8 சதவிகிதமாக இருந்தது.

புதிய கார்கள் அறிமுகம், விளம்பரம் மற்றும் நகர்புற தேவைகள் ஆகியவற்றினால் இந்த விற்பனை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக கார் தயாரிக்கும் 7 பெரிய நிறுவனங்களின் விற்பனை  85 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 
2015 ஏப்ரல் மாதத்தில் மட்டும்  1,86,197 வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இதுவே கடந்த 2014 ஏப்ரல் மாதத்தில் 1,56,419 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.
திருமணம், எரிபொருள் விற்பனை விலை குறைவு, குறைந்த வட்டியில் கடன் போன்றவற்றினால் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

மேலும் குறைவாக விற்பனையாகும் வாகனங்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கியதாலும் விற்பனை அதிகரித்துள்ளது.

 
கார் விற்பனை சந்தையில் முன்னிலை வகிக்கும் மாருதி சூசுகி நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டை விட 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கார்தகளை ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close