Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்தின் இறக்குமதி 20% அதிகரிப்பு!

சமீபத்திய நாட்களாகவே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து காணப்பட்டது மற்றும் தங்கத்தின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது ஆகிய இரு காரணங்களால் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் 20% அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், கடந்த நவம்பர் மாத்தில் மத்திய அரசு தங்கத்தின் மீதான 80:20 என்ற கட்டுப்பாட்டை நீக்கியதும் இறக்குமதி அதிகரிப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் 3,430 கோடி டாலர் (5.5.15-ம் தேதி நிலவரப்படி ரூ.2,18,045 கோடி) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டில் 2,870 கோடி டாலர் அளவுக்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  இதை இதற்கு முந்தைய 2012-13-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 47% குறைவு. அந்த நிதி ஆண்டில் மட்டும் 5,380 கோடி டாலர் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச்  மாதத்தில் மட்டும் இந்தியாவில் தங்க இறக்குமதி இரு மடங்கு அதிகரித்து 498 கோடி டாலராக காணப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ