Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரப்பருக்கான இறக்குமதி வரி 25 சதவிகிதமாக உயர்வு.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரப்பருக்கு தற்போது 25 சதவிகிதம் இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்பு ரப்பர் இறக்குமதிக்கு 20 சதவிகிதம் வரி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இறக்குமதி வரி உயர்வை ரப்பர் உற்பத்தியாளர்கள் வரவேற்றிருக்கிறார்கள். ஆனால் ரப்பரை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் இதை கண்டித்திருக்கின்றன. 
 
முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட  ரப்பர் பொருட்களே வெறும் 10 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் போது, மூலப் பொருளாக பயன்படுத்துப்படும் ரப்பருக்கு 25 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்திருப்பது சரியில்லை என்று தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்திருக்கின்றனர் ரப்பர் தொழிற்சாலை அதிகாரிகள்.
 
இதனால் இந்தியாவில் ரப்பர் தொழிற்சாலைகளின் வளர்ச்சி தடை படும் என்று தெரிவித்திருக்கின்றனர். ஏற்கனவே ரப்பர் பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கபடுவதை விட வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் ரப்பர் பொருட்கள் விலை குறைவாக கிடைப்பதால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதாக அனைத்து இந்திய ரப்பர் தொழிற்சாலை சங்கம் தெரிவித்திருக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close