Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃப்யூச்சர்ஸ் ரீடெயில் மற்றும் பார்தி ரீடெயில் நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளது.

ஃப்யூச்சர்ஸ் ரீடெயில் மற்றும் பார்தி ரீடெயில் நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளது. இந்த செய்தி வெளியான உடன் ஃப்யூச்சர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தை கண்டு வருகிறது.  இந்த இணைப்பிற்கு பின் இரண்டு பெரிய நிறுவனங்களின் விற்பனை 15,000 கோடிக்கு அதிகமாக இருக்கும் என்று ஃப்யூச்சர்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கிஷோர் பியானி தெரிவித்திருக்கிறார். இந்த இணைப்பு இரண்டு நிறுவனங்களும் வேகமாக வளர ஒரு நல்ல தந்திரமாக இருக்கும் என்று பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை தலைவர் ராஜன் பார்தி மிட்டல் தெரிவித்திருக்கிறார்.

இந்த இரண்டு நிறுவனங்களையும் சேர்த்து, பிக்பசார், ஈஸிடே, ஃபுட் பசார், ஹோம் டவுன், இ-சோன், ஃபுட்ஹால் போன்ற பிராண்டுகள் இருக்கின்றன. இந்த பிராண்டுகள் இந்தியாவின் 243 நகரங்களில் 570 கடைகளை வைத்திருக்கின்றன. 
 
தற்போது ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்திற்கு 5,200 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்த இணைத்தலுக்குப் பின் ஃப்யூச்சர்ஸ் குழுமம் ஃப்யுச்சர்ஸ் ரீடெயில் மற்றும் ஃப்யூச்சர்ஸ் என்டர்பிரைஸ் என்று இரண்டு நிறுவனமாக  பிரிக்கப்பட இருக்கிறது.  இதில் ஃப்யூச்சர்ஸ் ரீடெயில் சில்லறை வியாபாரத்தை மட்டும் கவனிக்க இருக்கிறது. ஃப்யூச்சர்ஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உள்கட்டமைப்பு, முதலீடுகள் மற்றும் சொத்து நிர்வாகம் போன்ற பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
 
இந்த நிறுவனத்தை இணைக்க எந்த பண பரிவர்த்தனைகள் இல்லாமல் பங்குகள் பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே இணைக்கப்பட இருக்கிறது. பார்தி  ரீடெயில் பங்குதாரர்களுக்கு 500 கோடி மதிப்புள்ள பங்குகளும், 250 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களும் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது பார்தி ரீடெயில். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ