Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்டுமானத்துறையின் வளர்ச்சி 9.42%

இந்தியாவில் அடுத்த வரும் ஆண்டுகளில் அதாவது 2015 - 2022 வரை ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறையில் 7.65 கோடி திறன்மிக்க பணியாளர்கள் தேவை என்று தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், கணித்திருக்கிறது. இந்தியாவில் மற்ற துறைகளைக் காட்டிலும் கட்டுமானம், ரியல் எஸ்டேட் ஆகிய துறையில் தான் வரும் ஆண்டுகளில் அதிக தேவை இருக்கும் என்று கணித்திருக்கிறது. 

இந்தியாவில் அதிகம் சீசன் சார்ந்த  வேலைவாய்ப்புகளை வழங்குவதில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கட்டுமானத் துறை பெரும்பங்கு வகிக்கிறது. இந்தியாவில் தோராயமாக 1.52 கோடி பேர் சீசன் சார்ந்த வேலைகளை பார்த்து தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். அதில் 36.2% மக்கள் கட்டுமானத் துறையில் மட்டுமே பணி செய்கின்றனர்.  இந்தியாவில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை மட்டும் 4.50 கோடி வேலைவாய்ப்புகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவவாக்குகிறது. 
 
கடந்த 2000 - 2013 ஆம் ஆண்டு வரை 40,399 மில்லியன் டாலர் அலவுக்கு அந்நிய நிகர முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. 2020ஆம் ஆண்டுக்குள் 180 பில்லியன் டாலர்  அளவுக்கு அந்நிய நிகர முதலீடுகளை ஈர்க்க உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த துறை தற்போது ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தில்  9.42% வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ