Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஃபோசிஸ் மேற்கு வங்கத்தில் அதிரடி

 இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், மேற்கு வங்க மாநிலத்தில் முதல் முறையாக மென்பொருள் உருவாக்க மையம்  அமைக்க திட்டமிட்டு இருந்தது. இதன் மூலமாக புதிதாக 15 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த மையம் துவங்க தேவையான நிலத்தை கையகப்படுத்த, மாநில அரசிடம் முன்பணமாக இன்ஃபோசிஸ் ரூ.75 கோடி கொடுத்திருந்தது.  இந்த நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் , சிறப்பு பொருளாதார மண்டல (எஸ்இஇசட்) அந்தஸ்து அளிக்க வேண்டும்  அல்லது முன் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என மாநில அரசிடம் கேட்டு உள்ளது. தெரிவித்துள்ளது.

 

இன்ஃபோசிஸின் இந்த மையத்துக்கு  எஸ்சிஇசட் அந்தஸ்து வழங்க மேற்கு வங்கத்தின் முந்தைய இடது சாரி அரசு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் இப்போது உள்ள அரசு அதை வழங்க மறுத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 100 சதவிகித  வரி விலக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP