Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஸ் மானியம் வருமான வரி இல்லை; மத்திய அரசு அறிவிப்பு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு  (காஸ்) சிலிண்டருக்கான மானியம்  வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த மானியத் தொகைக்கும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற தகவல் வெளியானது. 


பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி சட்ட திருத்தத்தில், ஒரு தனி நபர் தான் பெறக்கூடிய மானியம்,  ஊக்கத்தொகை போன்ற பலன்களும் அவரது வருமான கணக்கில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டு இருந்ததே இதற்கு காரணம்.


இந்நிலையில்  இதனை மத்திய அரசு மறுத்துள்ளது.  மத்திய நிதித்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள விவர அறிக்கையில், ‘‘நிதி சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் தனி நபர் பெற்றுவரும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் அல்லது இதர நலத்திட்டங்கள் தொடர்பான மானியங்களுக்கு பொருந்தாது.  இது வணிகம் மற்றும் தொழில் தொடர்பாக பெறப்படும் லாபம், இதர வகையில் வரும் வருமானம் தான் இதில் சேரும். எனவே, காஸ் சிலிண்டருக்கான மானியம், நலத் திட்டங்கள் மூலமாக பெறக்கூடிய மானியங்களுக்கு வருமான வரி கிடையாது’’ என்று கூறியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ