Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

500 ரூபாய்க்கு ஐபோனா? திருப்தியளிக்காத அமேசானின் சம்மர் ஆஃபர்!

அமேசான் இன்று கிரேட் இந்தியன் சம்மர் ஆஃபர் என்ற பெயரில் மூன்று நாட்கள் ஆமேசான் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் ஆஃபர் விலையில் பொருட்களை வாங்கலாம் என அறிவித்திருந்தது. இன்று காலை அமேசான் ஆஃபர் துவங்கியதும் இது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே ஆஃபரை போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
அதுமட்டுமின்றி புதிய ஐபோன் 6 செல்போனை 500 ரூபாய்க்கு வாங்கலாம். அதற்கான டீலை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறியது அமேசான். ஆனால், டீல் முடிந்துவிட்டது.இணையதள சேவை இல்லை என்பவைதான் பதிலாய் வந்தன. அதேசமயம்  ஆஃபர் விலையில் அறிவிக்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே மிகவும் அடிப்படையான பொருட்களாக இருந்தது.
 
மேலும், இந்த ஆஃபரை ஆப்ஸில் பயன்படுத்தியவர்கள், சரியான வேகத்தில் இயங்கவில்லை என்றும், ஆஃபர் என்று காட்டும் விலை பொருளை வாங்கும் பக்கத்தில் இல்லை. அதனை விட அதிகமாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இணையதளத்தில் இந்த ஆஃபரை எதிர்நோக்கி இருந்தவர்களுக்கு இணையதளம் தற்போது இயங்கவில்லை என்ற செய்தி திரையில் தோன்றியது.
 
இன்னும் சிலர் புத்தகங்களும், பென்டிரைவ்கள் மற்றும் குழந்தைகளுக்காக பொம்மைகள்தான் இதில் அதிகம் இடம் பெற்றுள்ளன. மற்ற உபயோகமான பொருட்கள் கிடைக்கவில்லை என சமூக வலை தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
 
விற்பனை உத்தியை கையாளுகிறதா அமேசான்!
 
அமேசான் இந்த ஆஃபரை விற்பனை உத்தியாக அணுகியுள்ளது என்கின்றனர் பலர். பிற்காலத்தில் ஆப்ஸ்தான் எல்லாம் எனும்போது ஆப்ஸிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் வாடிக்கையாளர் விவரங்களை பெறவும் இந்த ஆஃபர் உதவியாக இருக்கும் என்ற உத்தியில் இந்த ஆஃபரை அணுகியுள்ளது அமேசான். உங்களது இணைய வேகம் எந்த அளவில் இருந்தாலும் அதற்கேற்ப இயங்கும் விதத்தில் இந்த ஆப்ஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன. 
 
இந்த ஆப்ஸை ஒருவர் டவுன்லோட் செய்து விட்டால், அவருக்கு தொடர்ந்து இந்த ஆப்ஸிலிருந்து பொருட்களுக்கான தவல்கள் வந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளரை தொடர்ந்து இந்த இ-காமர்ஸ் நிறுவனத்தோடு இணைப்பில் வைத்திருக்க முடியும் என்பதே இந்த நிறுவனங்களின் கணிப்பு. 
 
ச.ஸ்ரீராம்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close