Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில் நேரம்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் தொடர்பான கேள்விகளுக்கு நாணயம் விகடன் டிவிட்டரில் பதிலளித்துக் கொண்டிருக்கிறார் நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் அகமதாபாத் கிளையின் டெக்னோ மார்க்கெட்டிங் பிரிவின் துணை மேலாளர் மனோகரன். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 1. என் மனைவி கர்ப்பிணி. என் அலுவலகம் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றிடம் ஹெல்த் பாலிசி எடுத்திருக்கிறது. அந்த நிறுவனம் நார்மல் டெலிவரி என்றால் ரூ. 25,000, சிசேரியன் என்றால் ரூ. 35,000 கொடுக்கிறது. இந்த தொகையை நான் டெலிவரிக்கு பிறகு கிளெய்ம் செய்துக் கொள்ள முடியுமா? நெட் ஒர்க்கில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது அவசியமா?

ஆம். நெட்வோர்க் அல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டு சிகிச்சைக்கான பணத்தை மருத்துவமனையில் செலுத்திவிட்டு, ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் க்ளெய்ம் செய்து கொள்ளலாம்.  அல்லது நெட்வொர்க் மருத்துவமனைகளில் கேஷ்லேஸ் வசதி மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.  இதில் உங்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அந்தச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 
 
2. மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
 
எவ்வளவு கவரேஜ் கிடைக்கும், பாலிசியின் சட்ட திட்டங்கள், எதற்கு எல்லாம் க்ளெய்ம் கிடைக்காது, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மருத்துவமனை நெட்வொர்க்கள், நீங்கள் விண்ணப்பத்தோடு கொடுக்கும் ஹெல்த் டிக்ளரேஷன், நீங்கள் எடுக்கப் போகும் பாலிசியின் மூலம் ரூம் வாடகை, மருந்து செலவுகள், மருத்துவர் ஆலோசனைக் கட்டணங்கள் போன்றவை எவ்வளவு வழங்கப்படுகின்றன என்பதை  கவனிக்க வேண்டும்.
 
3.  ஐந்து ஆண்டுக்கு முன்பு வாங்கிய ஃப்ளோட்டர் கட்டணத்தை இந்த வருடம் திடீரென உயர்த்திவிட்டார்கள். ஏன்?
 
உங்கள் வயது அதிகரித்திருப்பதால் பிரீமியம் கட்டணம் அதிகரித்திருக்கிறது.
 
4. என் தாயின் வயது 65. ஏற்கனவே என்னிடம் உள்ள ஃப்பேமிலி ஃப்ப்லோட்டர் பாலிசியில் என் தாயாரையும் சேர்த்து பாலிசி செஉக்கலாமா?
 
 
பொதுவாக உங்கள் ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியில்  உங்கள் அம்மாவை சேர்த்துக் கொள்ள முடியாது, மூத்தகுடிமக்களுக்கு (60 வயது கடந்தவர்கள்) தனியாக வேண்டுமானால் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் நீங்கள் பாலிசி எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அணுகி இதை பற்றி விசாரித்து முடிவு செய்யவும்.
 
 
5. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க என்னென்ன ஆவணங்களை கொடுக்க வேண்டி இருக்கும்?
 
ப்ரொபோசல் பார்மில் கேட்கப்பட்duள்ள விவரங்களான உங்கள் முழு பெயர், பிறந்த தேதி, முகவரி, வேலை, உங்கள் உடல்நிலை பற்றிய முழு விவரங்களை அளித்தால் போதுமானது. இதைத் தவிர எந்த டாக்குமென்டுகளும் தேவை இல்லை.
 
6. எந்த மாதிரியான ஹெல்த் பாலிசி எடுக்க மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்? ஏதாவது வயது வரம்பு இருக்கிறதா?
 
பொதுவாக 45 அல்லது 50 வயது கடந்தவர்கள் புதிதாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கும் போது மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டி இருக்கும். ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இசிஜி, கண் பார்வை பரிசோதனை போன்றவைகள் செய்ய வேண்டி இருக்கும். 
 
7. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது ஓராண்டு பாலிசியா அல்லது நீண்ட கால பாலிசியா?
 
 
12 மாதங்கள் தான் ஒரு பாலிசியின் காலம்
 
8. என் அலுவலகத்தில் எனக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும் போது, தனியாக ஏதாவது பாலிசி எடுப்பது அவசியமா?
 
ஒருவருக்கு குரூப் பாலிசி இருக்கிறது என்றால் தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க தேவை இல்லை என்பார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை ஒருவர்  வேலை பார்க்கும் நிறுவனத்தில் நிறுவனம் எடுக்கும் குரூப் பாலிசியுடன் தனியாக ஒரு பாலிசி எடுப்பது நல்லது.  ஒரு வேலை நீங்கள் அந்த நிறுவனத்திலிருந்து விலகிவிட்டால், நீங்கள் தனியாக எடுத்த பாலிசியில் க்ளெய்ன் செய்து கொள்ளலாம்.
 
9. ஹெல்த் பாலிசியில் ஆண், பெண் பிரீமிய வேறுபாடு இருக்கிறதா? 
 
கிடையாது
 
10. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு எவ்வளவு தொகைக்கு வரிச் சலுகை கிடைக்கும்?
 
அந்த வருட நிதி ஆண்டின் வருமான வரி சட்டப்படி மாறுபடும். இந்த ஆண்டிற்கு வருடத்திற்கு 25,000 ரூபாய் வரை க்ளெய்ம் செய்யலாம். மூத்தக் குடிமக்களுக்கு ரூ. 30,000
 
11. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியத்தை கிஃப்ட் ஆக ஒருவருக்கு கொடுத்துவிட்டு அதற்கு வரிச் சலுகை நான் பெற முடியுமா?
 
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வேரு ஒருவருக்கு பரிசாக தர முடியாது. வரிதாரர் தனக்கு, தன் மனைவி, சார்ந்திருக்கும் பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு எடுக்கும் பாலிசிக்கு வரிச் சலுகை பெற முடியும். 
 
 
12. என் வயது 30, திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இதுவரை நான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வில்லை. இப்போது எடுக்க வேண்டும் என்றால் எந்த மாதிரியான பாலிசியை எடுக்கலாம்.

உங்களுக்கு குடும்பம் இருப்பதால் ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்லலாம். 3 - 5 லட்சம் ரூபாய் வரை கவரேஜ் இருப்பது நல்லது.

13. நான் ஒரு முன்னணி ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்திருந்தேன். திடீரேன நான் எடுத்த பாலிசி திட்டம் ரத்து செய்யப்பட்டு வேறு ஒரு திட்டத்தோடு இணைக்கப்பட்டிருப்பதாக இன்ஷூரன்ஸ் நிறுவனம் கூறுகிறது. இது சரியா ? 


குறிப்பிட்ட பாலிசியின் நிபந்தனைகள் மற்றும் விவரங்களை அறியாமல் கருத்து தெரிவிக்க இயலாது.

14. ஒரு பாலிசியின் க்ளெய்ம் சதவிகிதத்தை வைத்து மட்டும் அந்த பாலிசியை எடுக்கலாமா?


க்ளெய்ம் சதவிகிதத்தை வைத்து பாலிசி எடுக்கலாம். ஆனால் இந்த் ஒரு விஷயத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு பாலிசி எடுப்பதை தவிர்க்கவும்.

 
 
 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ