Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள

3.30 மணி நிலவரம் 

சென்செக்ஸ்           26599.11 மாற்றம்  -118.26
நிஃப்டி                       8057.30 மாற்றம் -39.70
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.46%
 
தங்கம் 10 கிராம் ரூ.26,968 மாற்றம் ரூ. +57.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,930.00 மாற்றம்  ரூ. +48.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.19 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
உலக அளவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் தோராயமாக ஒரு சதவிகிதத்திற்கும் அதிகமாக இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசியாவிலும் தோராயமாக அனைத்து சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. 
 
வர்த்தக நேர முடிவில் வங்கி, ஆயில் அண்ட் கேஸ், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஆட்டொமொபைல்  மிட் கேப் போன்ற துறைகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின.  ஐ.டி, டெக்னாலஜி போன்ற துறைகள் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
 
சென்செக்ஸில் 813  பங்குகள் ஏற்றத்திலும், 1854 பங்குகள் இறக்கத்திலும், 113 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 21 பங்குகள் ஏற்றத்திலும், 29 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.  
 
ஏற்றப் பங்குகள்
டிசிஎஸ் 3.34%
ஹெச் சி எல் டெக் 3.32%
ஏ சி சி         2.73%
பஜாஜ் ஆட்டோ 2.35%
கோல் இந்தியா 2.18%
 
இறக்கப் பங்குகள்
பேங்க் ஆஃப் பரோடா -5.37%
ஐ டி எஃப் சி                 -3.97%
கோட்டக் மஹிந்திரா -3.18%
ஆக்ஸிஸ் பேங்க் -2.94%

 

யெஸ் பேங்க்        -2.76%

1.30 மணி நிலவரம்

இன்று மதியம் 1.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 164.80 புள்ளிகள் குறைந்து 26552.57 என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 55.35 புள்ளிகள் குறைந்து 8041.65 என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகின்றன. இந்த நிலையில் எஃப்எம்சிஜி, ஐடி, டெக்னாலஜி துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் விலை அதிகரித்தும், ஆட்டோ, ஹெல்த்கேர், ஆயில் அண்டு கேஸ் ஆகிய துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன. 

மொத்தம் 1,668 நிறுவனப் பங்கு விலை இறக்கத்திலும், 772 நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றத்திலும் மற்றும் 142 நிறுவனத்தின் பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமலும் வர்த்தகமாகி வருகின்றன. பத்து கிராம் தங்கத்தின் விலை 19 ரூபாய் அதிகரித்து 26,930 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 64.17 ரூபாயாக அதிகரித்து வர்த்தகமாகிறது.

11.30 மணி நிலவரம்.


இந்திய பங்குச் சந்தை இன்று  இறக்கத்திலே வர்த்தகமாகி வருகிறது. அதாவது மும்பை பங்குச்  சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 55 புள்ளிகள் சரிந்து 2665 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்கு சந்தையின் குறியீடான நிஃப்டி 34 புள்ளிகள் சரிந்து 8061 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

 

இன்றைய காலை வர்த்தகத்தில் 887 நிறுவன பங்குகளை விலை உயர்ந்து, 1325 நிறுவன பங்குகள் விலை குறைந்தும், 148 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் வர்த்தகமாகி வருகிறது. 

9.30 மணி நிலவரம்

நேற்று இந்திய சந்தைகள் கடுமையான சரிவில் வர்த்தகமானது அதனைத் தொடர்ந்து, இன்றும் இறக்கத்தில் வர்த்தகமாக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கணித்திருக்கின்றனர். 

சென்செக்ஸ்           26598.83 மாற்றம்  -476.65
நிஃப்டி                       8040.45 மாற்றம் -153.30
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.53%
 
 
 
தங்கம் 10 கிராம் ரூ.26,911 மாற்றம் ரூ. +31.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,882.00 மாற்றம்  ரூ. +25.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.84 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
நேற்றைய வர்த்தகத்தில் உலக அளவில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்திலும் ஐரோப்பிய சந்தைகள் தேக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று வர்த்தகமாகத் தொடங்கிய அமெரிக்க சந்தைகள் இறக்கத்திலும், தேக்கத்திலும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. ஆசிய சந்தைகளில் அனைத்து பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.  வர்த்தக நேர தொடக்கத்தில்  இந்திய சந்தைகளின் அனைத்து துறைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. 
 
ஏற்றப் பங்குகள்
ஐசிஐசிஐ பேங்க் 0.16%
ஐடிசி                 0.09%
 
இறக்கப் பங்குகள்
இண்டஸ் இந்த் பேங்க் -0.49%
லார்சன்        -0.30%
ஐடியா செல்லூலர்  -0.29%
டாடா பவர்                 -0.07%
ஹீரோ மோட்டோ கார்ப்-0.06%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ