Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹீரோ மோட்டோகார்ப்பின் நிகர லாபம் 14% சரிந்திருக்கிறது

இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர வாகன  உற்பத்தியாளரான ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டுக்கு 14% சரிந்திருக்கிறது.  அதே நேரத்தில் கடந்த நிதி ஆண்டுக்கு (2014 - 2015) 13% நிகர லாபம் அதிகரித்திருக்கிறது.

கடந்து மொத்த நிதி ஆண்டுக்கு (2014 - 2015) இந்த நிறுவனத்தின் வருவாய் 4%  உயர்ந்து 6,695 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. நிகர லாபம் 13% அதிகரித்து 2,385.64 கோடியாக உயர்ந்திருக்கிறது.  அதே போல் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனையும் 9% அதிகரித்திருக்கிறது. நிகர விற்பனையின் மதிப்பு 27,350 கோடியாக கணக்கிடப்பட்டிருக்கிறது. 
 
ஆனால் நான்காவது காலாண்டுக்கு 31 மார்ச்  2015 நிலவரப்படி 476.53 கோடி ரூபாய் நிகர லாபமாக கணக்கிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 554.53 கோடி ரூபாய் நிகர லாபமாக கணக்கிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ