Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎன்சி இன்ஃப்ராடெக் பங்கு வெளியீடு

சாலை உள்கட்டமைப்பு நிறுவனம்
பிஎன்சி இன்ஃப்ராடெக் லிமிடெட்
பொதுமக்களுக்கு பங்கு வெளியீடு - 8 மே, 2015

அடுத்த 5 ஆண்டுகளில் சாலைகள் துறையில் முதலீடு 1.7 மடங்கு அதிகரித்து ரூ. 7.3 டிரில்லியனாக உயரும் என கிரைசில் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்  இந்திய உள்கட்டமைப்பு கட்டுமான நிறுவனமான பிஎன்சி இன்ஃப்ராடெக் லிமிடெட் (PNC Infratech Limited) பொதுமக்களுக்கு பங்கு வெளியிடுகிறது.
 
இந்தப் பங்கு விற்பனை  8 மே, 2015-வெள்ளிக் கிழமை  தொடங்குகிறது. சம பங்கு ஒன்றின் விலைப்பட்டை ரூ. 355 முதல் ரூ. 378 ஆக உள்ளது. அதிகபட்ச விலைப்பட்டையின் படி இந்த நிறுவனம் சுமார் ரூ.488 கோடி திரட்ட இருக்கிறது.

இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், டெல்லி, பீகார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம். மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில்  திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது அல்லது நிறைவேற்றி வருகிறது.

பிஎன்சி இன்ஃப்ராடெக் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கை நிறுவனங்களாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), இந்திய விமான நிலைய ஆணையம், டெல்லி மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், உத்தரப் பிரதேச மின்சார கழகம்,  ரெய்ட்ஸ் (RITES) லிமிடெட், உத்தரப் பிரதேச மாநில நெடுஞ்சாலை ஆணையம், உத்தரப் பிரதேச எக்ஸ்பிரஸ்வே தொழில் மேம்பாட்டு ஆணையம், ஹரியானா மாநில சாலை மேம்பாட்டு கழகம் உள்ளிட்டவை இதன் வாடிக்கை நிறுவனங்களாக இருக்கின்றன.

பிஎன்சி இன்ஃப்ரா டெக், இது வரை 42 பெரிய இன்ஃப்ரா திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஆர்டர் 2015 மார்ச் 31 நிலவரப்படி ரூ. 7,849.7 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது ரூ. 6,085.78 கோடியாக இருந்தது. 

டிசம்பர் 31, 2014 உடன் முடிந்த 9 மாத காலத்தில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 13,263.71 மில்லியனாகவும், மொத்த நிகர லாபம் ரூ.13,263.71 மில்லியனாகவும் உள்ளது. 2013-14ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.13,642.43 மில்லியனாகவும், மொத்த நிகர லாபம் ரூ. 519.69 மில்லியனாகவும் உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ