Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 36% அதிகரிப்பு!

 

 
சிறு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 36% அதிகரிப்பு!

சிறு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வது 36% அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 1.89 லட்சம் கோடி. இது கடந்த 2014 மார்ச் மாதத்தில் ரூ. 1.39 லட்சம் கோடியாக இருந்தது என ஆம்ஃபி  அமைப்பு தெரிவித்துள்ளது.   அதாவது 2015 மார்ச் மாத இறுதி வரை 15 சிறு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது.


முதலீடு அதிகரித்தற்கு முக்கிய காரணம் பங்குசந்தை வளர்ச்சி அடைந்து வருவது, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்பு உணர்வை பொதுமக்களிடம் அதிகம் ஏற்படுத்தி வருவது ஆகும். மேலும் முதலீடு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள செபி அமைப்பும் அதிகப்படுத்தியுள்ளது.

ஈக்விட்டி அல்லாத திட்டங்களிலிருந்து ஈக்விட்டி திட்டங்களுக்கு மாறியிருப்பது அதிகரித்துள்ளது. இந்தியாவிலுள்ள 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மொத்தம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 12 லட்சம் கோடியாக உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ