Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஓபியின் லாபம் அதிகரித்தது!

ஐஓபி வங்கியின் லாபம் கடந்த காலாண்டில் 35 கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிட்டால் இது 87% அதிகமாகும். கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ஐஓபி வங்கி 268 கோடி ரூபாய் நஷ்டம் கண்டது.
 
என்றாலும் 2014-15 நிதி ஆண்டில் இந்த வங்கி 454 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கு முந்தைய ஆண்டில் இந்த வங்கி அடைந்த லாபம் 602 கோடி ரூபாய்.
 
''நான்காம் காலாண்டில் ஐஓபியின் செயல்பாட்டு வரம்பு 1,180 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் செயல்பாட்டு வரம்பானது 726 கோடியாக இருந்தது''  என்று சொன்னார் இந்த வங்கியின் நிர்வாக இயக்குநரும் முதன்மை நிர்வாக அதிகாரியுமான கோடீஸ்வரன்.
 
வாராக் கடனாக இருந்ததில் இருந்து சுமார் 780 கோடி ரூபாய் இந்த வங்கிக்கு நான்காம் காலாண்டில் வந்திருக்கிறது!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ