Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிஎன்பியின் நிகரம் லாபம் குறைந்தது!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் 62% குறைந்திருக்கிறது. 2015, மார்ச் 31-வுடன் முடிந்த நான்காம் காலாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம் 307 கோடியாக இருக்கிறது. இந்த வங்கியின் முழு ஆண்டு 8.4% குறைந்து, 3,062 கோடியாக இருக்கிறது. 

 
''வாராக் கடன் தொடர்பாக ஏறக்குறைய 938 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததே நிகர லாபம் குறைந்ததற்கு முக்கிய காரணம் ஆகும்'' என இந்த வங்கியின் நிர்வாக இயக்குநரும் முதன்மை நிர்வாக அதிகாரியுமான கெளரி சங்கர் தெரிவிததார்.
 
வாராக் கடனுக்காக இந்த வங்கி ஒதுக்கீடு செய்த தொகை ஏறக்குறைய 87% அதிகரித்திருக்கிறது. அதாவது, 1,756 கோடி ரூபாயிலிருந்து 3,281 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த வங்கியின் இயக்குநர்கள் கூட்டத்தில், 2 ரூபாய் முகமதிப்பு பங்கு ஒன்றுக்கு 3.30 ரூபாய் டிவிடெண்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close