Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைக்ரோமேக்ஸை வாங்கும் அலிபாபா!

செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் இன்ஃபர்மேட்டிக்ஸ் நிறுவனத்தின் 20 சதவிகித பங்குகளை வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
 
இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் அலிபாபா நிறுவனம் 1.2 பில்லியன் டாலர் (1 டாலர் = 63.95 ரூபாய்) முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதன் மூலம் அலிபாப நிறுவனம் இந்தியாவில் நிலையான இடத்தைப் பெற வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
 
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் ஜப்பானின் சாஃப்ட் பேங்க் நிறுவனம் முதலீடு செய்வதாக இருந்தது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு பற்றிய கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சாஃப்ட்பேங்க் நிறுவனம் முதலீடு செய்வது நிறுத்தி வைத்துள்ளது. என்றாலும் இந்த பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக முடிந்துவிடவில்லை.
 
இந்த நிலையில் அலிபாபா நிறுவனம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ