Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசியல் மற்றும் சந்தை நடவடிக்கைகள்

 ரியல் எஸ்டேட் மசோதா என்னானது?

இந்த மசோதா பில்டர்களுக்கு சாதகமாகவும் வீடு வாங்கும் நடுத்தர வருமானப் பிரிவினருக்கு பாதகமாகவும் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த மசோதா தாக்கல் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, சரக்கு மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) மசோதா நாடாளுமன்றத்தில் பாஸாகி இருக்கிறது. ஆனால், இது ராஜ்ய சபையில் நிறைவேறுமா? என்று கேள்விக் குறை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். 

 
ரிசர்வ் பேங்க் வட்டியை குறைக்குமா? 
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, அதன் ஜூன் 2 ம் தேதி கடன் கொள்கை ஆய்வு கூட்டத்தின் போது 0.25% வட்டி குறைக்கும் என பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மிகக் குறைவாக மார்ச் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீடு (சிபிஐ) 5.17% ஆக குறைந்துள்ளது. அடுத்த 2016 ம் ஆண்டு ஜனவரிக்குள் சிபிஐ பணவீக்க விகிததை 6%க்குள் கொன்டு வர ஆர்பிஐ திட்டமிட்டிருந்தது. அதை விட இப்போது பணவீக்க விகிதம் குறைந்துள்ளதால் ஆர்பிஐ கடனுக்கான வட்டியை வேகமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இது கடந்த ஆறு ஆண்டுகளில் மிக அதிகம். அவை, வங்கி (ரூ.3.44 லட்சம் கோடி) மற்றும் ஐடி நிறுவனப் பங்குகளில்  (ரூ.2.77 லட்சம் கோடி) அதிக முதலீட்டை மேற்கொண்டுள்ளன. எஃப்ஐஐக்களின் முதலீட்டில் அமெரிக்கா 35 சதவிகிதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த இடங்களில் மொரிசியஸ் (16%), சிங்கப்பூர் (15%), இங்கிலாந்து (10%) ஆகிய நாடுகள் உள்ளன. 
 
‘‘எல்ஐசி, ரூ.1,116 கோடிக்கு என்எம்டிசி பங்குகளை வாங்கி இருக்கிறதே?’’ என்று விசாரித்தோம்.
‘‘இதன் மூலம் இந்த நிறுவனத்தில் எல்ஐசியின் பங்கு மூலதனம் 8.11 சதவிகிதத்திலிருந்து 10.12 சதவிகிதமாக உயந்துள்ளது. 5 முதல் 10 ஆண்டு கால முதலீடாக இந்த முதலீட்டை எல்ஐசி மேற்கொண்டிருப்பதாக அனலிஸ்ட்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ