Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

399 புள்ளிகள்: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை!

 

12.30 மணி நிலவரம்

 

இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை 12.30 மணி நிலவரப்படி தொடர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 363.10 புள்ளிகள் உயர்ந்து 27468.49 என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

 

அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 114 புள்ளிகள் அதிகரித்து 8305.50 என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சந்தை தொடர் ஏற்றத்தில் இருக்கும் இந்த நிலையில் பெரும்பாலான துறை சார்ந்த பங்கு விலையும் அதிகரித்து வர்த்தகமாகிறது. குறிப்பாக, ஆட்டோ, ஹெல்த்கேர், மெட்டல் துறை சார்ந்த பெரும்பானலான பங்குகளின் விலை உச்சத்தில் இருக்கிறது. அதே சமயம் எஃப்எம்சிஜி துறை சார்ந்த பங்குகள் விலை சற்று குறைந்து வர்த்தகமாக தொடங்கியிருக்கிறது.

 

பேங்க் ஆஃப் பரோடா, எஸ்பிஐ, ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், ஹெச்.யூ.எல், ரிலையன்ஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.


10.45 மணி நிலவரம்

 

இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்தில் துவங்கி உள்ளது. இன்று(11.05.2015)

காலை 10.45 நிலவரப்படி 277 புள்ளிகள் உயர்ந்து 27383 புள்ளிகளுடன்  வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி 77 புள்ளிகள்

உயர்ந்து 8269 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. 

 

இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல் (2.82%), பஜாஜ் ஆட்டோ (2.49%) 

ஹூரோமோட்டோ கார்ப் (2.98%) உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. ஹெச்யுஎல் (1.95%), லூபின் (1.49%), பிஎன்பி (1.71%) ஆகிய பங்குகள்  விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close