Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரிக்ஸ் வங்கியின் தலைவராக கே.வி. காமத் நியமனம்!

பிரிக்ஸ் வங்கியின் தலைவராக ஐசிஐசிஐ வங்கியின் தலைவரான கே.வி.காமத் திங்கள்கிழமை அன்று நியமிக்கப்பட்டார். 
நியூ டெவலமென்ட் பேங்க் என்கிற பெயரில் வழங்கப்படும் இந்த வங்கியானது சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து செயல்படும். இந்த வங்கியின் முதல் தலைவரை நியமிக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்பதால், கே.வி. காமத்தின் பெயரை இந்திய அரசு அறிவித்துள்ளது.
 
 
50 பில்லியன் டாலர் முதலீட்டில் தொடங்கப்படும் இந்த வங்கியானது, தற்போது உலக அளவில் மிகப் பெரும் பொருளாதார அமைப்புகளான உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி ஆணையத்துக்கு மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆசியப் பிராந்தியத்தில் உள்கட்டமைப்புத், திட்டங்களுக்கு இந்த வங்கியானது அதிக அளவில் கடன் தரும் என்று சொல்லப்படுகிறது.
 
இந்த வங்கியில் சீனா 41 பில்லியன் டாலர்களையும், பிரெசில், இந்தியா, ரஷ்யா என தலா 18 பில்லியன் டாலர்களையும் தென் ஆப்பிரிக்கா 5 பில்லியன் டாலர்களையும் தங்கள் பங்காக தரவிருக்கின்றன.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ