Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓய்வுக் கால தேவை: இந்தியர்களின் சேமிப்பு எப்படி?

 ஓய்வுக் கால தேவை: இந்தியர்களின் சேமிப்பு எப்படி? 

ஓய்வுக் கால தேவைகளுக்காக  இந்தியர்கள் எதில் சேமிக்கிறார்கள் என்பது குறித்த சர்வே-ஐ ரிலையன்ஸ் கேப்பிட்டல் அசட் மேனேஜ்மென்ட் நிறுவனம், ஐஎம்ஆர்பி இன்டர்நேஷனல் அமைப்பு இணைந்து  நடத்தியது. இந்த சர்வே ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. 
இதில் ஓய்வுக் கால தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக இந்தியர்கள் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி, ஃபிக்ஸட் டெபாசிட், பிபிஎஃப் ஆகிய முதலீட்டு திட்டங்களில் சேமிக்கிறார்கள். இந்த திட்டங்களுக்குதான் அதிக முக்கியத்துவமும் கொடுக்கிறார்கள்.
மேலும் ஜிடிபியுடன் ஒப்பீடும் போது ஓய்வுக் காலத்துக்காக இந்தியார்கள் 15.1 சதவிகிதம் மட்டுமே சேமிக்கிறார்கள். ஆனால் ஜெர்மனி 21 சதவிகிதம், பிரேசில் 41 சதவிகிதமும், யுஎஸ்ஏ வில்78.9 சதவிகிதமும் உள்ளது.
இப்போது இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியாக உள்ளது.  இது 2050 ஆண்டில் 30 கோடியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இந்தியாவில் ஓய்வுக் காலத்துக்காக மொத்தம் ரூ. 15 லட்சம் கோடி மதிப்புக்கு ஓய்வுக் கால சொத்து உள்ளது. இதில் பிஎஃப் தொகையும் சேர்ந்தது ஆகும். இதில் 90 சதவிகிதம்  நிரந்தர வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
ஓய்வுக் கால முதலீடுக்கான திட்டங்களின்  தேவை அதிகரித்து வருவதால் இந்தியாவில் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சில ஃபண்ட் திட்டங்களை வைத்துள்ளன. எல்ஐசி நோமுரா, ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட், ஐடிபிஐ மியூச்சுவல் ஃபண்ட், பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃப்ண்ட், டிஎஸ்பி பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய நிறுவனங்களின் பென்ஷன் திட்டங்கள் செபி அமைப்பின் ஒப்புதலுக்காக  உள்ளது.  யுடிஐ மியூச்சுவல் ஃபண்ட், பிராங்கிளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் இந்தியா நிறுவனங்களின் ரிட்டயர்மென்ட் ஃபண்ட்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP