Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிபி கார்பின் லாபம் 16% சரிந்தது!

கூடுதல் வரி செலவு காரணமாக ஊடகத் துறையை சேர்ந்த நிறுவனமான டி.பி கார்ப்பின் 2014 - 15-ம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டின் நிகர லாபம் சுமார் 16% குறைந்துள்ளது.  இந்த வருடத்தில் நான்காவது காலாண்டின் நிகர லாபமாக 63.99 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது . கடந்த வருடத்தில் இதே காலாண்டில் 75.92 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது. 


2014-15ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மொத்த நிகர லாபம் உயர்ந்து, 316.34 கோடி ரூபாயாக இருக்கிறது. 2013 - 14  நிதி ஆண்டின் மொத்த நிகர லாபம் 306.64 கோடி ரூபாய் ஆகும். 

2013 - 14 வருடத்தோடு ஒப்பிடும் போது 2014 - 15-ம் வருடத்தின் நான்காவது காலாண்டில் நிகர விற்பனை 7% அதிகரித்து 477.17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2013 -14-ம் வருடத்தின் நான்காவது காலாண்டின் நிகர விற்பனை 446.81 கோடி ரூபாயாக இருந்தது 


2014 -15 வருடத்தின் நான்காவது காலாண்டிள் 39.22 கோடி ரூபாயை வரியாக கட்டியுள்ளது. இது 2013 - 14ம் வருடத்தின் நான்காவது காலாண்டில் 18.86 கோடி ரூபாயை வரியாக கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இதன் மொத்த நிகர விற்பனை 1,979.18 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் மொத்த நிகர விற்பனை 1,830.56 கோடி ரூபாயாக இருந்தது.


பத்து ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு 4.25 ரூபாய் டிவிடெண்ட்டாக தர கம்பெனியின் இயக்குனர் குழு முடிவு செய்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP