Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐசிஐசிஐ வங்கி சீனாவில் கிளை திறப்பு

 இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, சீனாவின் புகழ்பெற்ற வணிக நகரமான ஷாங்காயில் தனது புதிய கிளையை வருகிற 16 மே 2015 சனிக்கிழமை அன்று திறக்கவுள்ளது. 

 

மூன்று நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ள இந்தியா பிரதமர் நரேந்திர மோடி புதிய கிளையை திறந்து வைக்க உள்ளார். இந்த கிளை திறப்பு விழாவின்போது ஐசிஐசிஐ வங்கியின் முதன்மை செயல் அதிகாரி  சந்தா கோசார் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. உலகில் 17 நாடுகளில் தனது கிளைகளை ஐசிஐசிஐ வங்கி நிறுவியுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ