Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஸ்ட்ரோல் நிறுவனத்தின் நிகர லாபம் உயர்வு

இந்தியாவின் மிகப் பெரிய ஆயில் நிறுவனங்களில் ஒன்றான காஸ்ட்ரோல் நிறுவனத்தின் 2015-ஆம் வருடத்தின் முதலாம் காலாண்டுக்கான நிகர லாபம் 11.13 % அதிகரித்து, 146.7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2014-ஆம் வருடத்தில் முதலாம் காலாண்டில் இதே நிறுவனத்தின் நிகர லாபம் 132 கோடி ரூபாயாக இருந்தது. 
 
பொதுவாக எல்லா  நிறுவனங்களும் ஏப்ரல் தொடங்கி மார்ச் வரையிலான காலத்தை நிதி ஆண்டாக பின்பற்றும். ஆனால், இந்த நிறுவனம் ஜனவரியிலிருந்து ஆரம்பித்து டிசம்பர் வரையிலான காலத்தை நிதியாண்டாக  பின்பற்றுகிறது.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ