Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்சிஎக்ஸின் லாபம் 12% அதிகரித்தது!

எம்சிஎக்ஸ் நிறுவனத்தின் 2014-15 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டின் நிகர லாபம் சுமார் 12% அதிகரித்து, 49.30 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

 
2013-14 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 43.75 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2014-இல் முடிந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 22.97 கோடி ரூபாயாக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது, 2015 மார்ச் மாத முடிவில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் செலவுகள் குறைந்ததால், நிகர லாபம் அதிகரித்து இருப்பதாக இந்த நிறுவனத்தின் நிர்வாகம் சொல்லி இருக்கிறது. 2013-14 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 63.96 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருவாய், 2014-15 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 7.8% குறைந்து 58.97 கோடி ரூபாயாக உள்ளது.  இந்த நிறுவனத்தின் லாபம் உயர்ந்ததால், இதன் பங்கு விலையும் கணிசமாக உயர்ந்தது! 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ