Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜூபிலன்ட் ஃபுட் நிகர லாம 26% உயர்ந்தது!

பாஸ்ட் புட் கலாச்சாரத்தால் ஏற்பட்ட வலுவான மாற்றம் காரணமாக டோமினோஸ் பீட்சா, டன்கின் டொனட்ஸ் ஆகிய செயின் உணவகங்களை நடத்திவரும் ஜீபிலன்ட் ஃபுட் நிறுவனத்தின் 2014-15 ஆம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டின் நிகர லாபம் 26.37% அதிகரித்து 31.53 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

 
இதே நிறுவனம் 2013-14 ஆம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டின் நிகர லாபம் 24.95 கோடி ரூபாயாக இருந்தது. 2013-14 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 434 கோடி ரூபாயாக யாக இருந்த நிகர விற்பனை, 2014-15 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 25% அதிகரித்து 542 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

2014-15-ஆம் நிதியான்டின் நான்காம் காலாண்டில் ஈட்டிய வருவாயும் நிகர லாபமும் இந்த நிறுவனத்தின் பங்கு விலையை 9% அதிகரிக்கச் செய்திருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ