Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாராக் கடன் அதிகரிப்பால் ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கியின் நிகர லாபம் 60 % சரிவு

 வாராக் கடன் அதிகரிப்பால் ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கியின் நிகர லாபம் 60 % சரிவு

ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கியின்  நிகர லாபம்  நான்காம் காலாண்டில் 60 % சரிந்து 101.61 கோடி ரூபாயாக உள்ளது. 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர லாபம் 250.60 கோடி ரூபாயாக இருந்தது.
2013 -14 ஆம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டில் 1.66 சதவிகிதமாக இருந்த மொத்த வாராக் கடன், 2014 -15 ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டில் 5.97 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.
2014-15  ம் நிதி ஆண்டின் மார்ச் மாத முடிவில் நிகர வாராக் கடன் 0.22 சதவிகித்திலிருந்து 2.77 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 
2014 -15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் இந்த வங்கியின் வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ஆறு மடங்கு உயர்ந்து 380.76 கோடி ரூபாயாக உள்ளது. 2013 -14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் இந்த ஒதுக்கீடு 60.57 கோடியாக இருந்தது. 
2013 -14 ஆம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 1,888.6 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் 2014 -15 ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டில் 2,023.5 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
2013-14 ஆம் நிதி ஆண்டில் 1,182.47 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் 2014-15 ம் நிதி ஆண்டில் 57% சரிந்து 508.60 கோடியாக உள்ளது
2013-14 ம் நிதி ஆண்டில்  7,157.26  கோடி ரூபாயாக  இருந்த வங்கியின் மொத்த வருமானம் 2014-15 ம் நிதி ஆண்டில் 7,655.10  கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது
 வாராக் கடன் அதிகரிப்பால் இந்த வங்கியின் நிகர லாபம் சரிந்ததோடு பங்கின் விலையும் கணிசமாக குறைந்திருக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ